செக்ரட்டரியை மணக்கிறார் ரோஹித் சர்மா... விரைவில்!
டெல்லி: சரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மாவும் திருமண வாழ்க்கையில் புகவுள்ளார். தனது செக்ரட்டரியான ரித்திகா சஜ்தே-வை அவர் மணக்கவுள்ளார்.
இது காதல் திருமணம். கடந்த 6 வருடங்களாக ரோஹித்தின் விளம்பர செயலாளராக இருந்து வருபவர் ரித்திகா. இது நட்பாக மாறி, பின்னர் காதலாக உருமாறி தற்போது திருமணத்தில் முடியவுள்ளது.
தனது திருமணச் செய்தியை ரித்திகாவுடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தைப் போட்டு டிவிட்டரில் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.
சமீபத்தில்தான் சுரேஷ் ரெய்னா தனது பள்ளிப் பருவத் தொழி பிரியங்காவை ஏப்ரல் 3ம் தேதி மணந்தார். இந்த நிலையில் ரோஹித்தின் திருமணச் செய்தி வந்துள்ளது.
தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி வழி நடத்திக் கொண்டிருக்கிறார் ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, May 3, 2015, 16:08 [IST]
Other articles published on May 3, 2015


Click it and Unblock the Notifications