Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை குறித்து ஹர்திக் ஏளன பேச்சு.. அட்ரஸே தெரியாத வீரரை வைத்து பழிவாங்கிய ரோகித்.. செம பதிலடி

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி புகழ்பெற்ற ஹர்திக் பாண்டியா தற்போது குஜராத் அணியின் கேப்டனாக தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா யார் என்று தெரியாத காலத்தில் அவரை தேர்வு செய்து மும்பை அணி பயன்படுத்தியது. ஆனால் பேட்டி ஒன்றில் பேசிய ஹர்திக் பாண்டியா மும்பை அணி சிறந்த வீரர்களை எல்லாம் ஒன்றாக தேர்வு செய்து கோப்பையை வெல்வதாக விமர்சனம் செய்தார்.

Rohit sharma gives befitting reply to Hardik pandya by giving chance to unknown player

இது மும்பை அணி ரசிகர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்தது. பும்ரா ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களை எல்லாம் மும்பை அப்படித்தான் தயார் செய்ததா என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ரோகித் சர்மா இன்று ஒரு காரியத்தை செய்திருக்கிறார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த ஆட்டத்தில் யார் என்று தெரியாத ஒரு வீரரை ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இறக்கினார். கேரளாவைச் சேர்ந்த 29 வயதான விஷ்ணு வினோத் களத்திற்கு வந்து 20 பந்துகளில் விரைவாக முப்பது ரன்களை சேர்த்து விட்டு சென்றார். இதில் இரண்டு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதனால் நடு ஓவர்களில் கொஞ்சம் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் க்கு இது புது உத்வேகத்தை கொடுத்தது.

இவர் 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிருக்கிறார். ஆனால் அதன் பிறகு 6 ஆண்டுகள் கழித்து தற்போது முதல் போட்டியில் விஷ்ணு வினோத் விளையாடி இருக்கிறார். இதேபோன்று நடப்பு சீசனில் நெஹல் வதேரா என்ற இளம்வீரரும் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

இன்றைய ஆட்டத்தில் அவர் 7 பந்துகளில் 15 ரன்கள் அடித்தார். இதில் ஒரு பௌண்டரியும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவின் பேச்சுக்கு ரோகித் சர்மா யார் என்றே தெரியாத வீரர்களை வைத்து நல்ல பதிலடி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Friday, May 12, 2023, 21:46 [IST]
Other articles published on May 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+