தோனியை பின்பற்றிய ரோகித்..! கோலி, தோனியே செய்யாத சாதனையை படைத்த ஹிட்மேன்..!! அசத்தல் ஆரம்பம்
அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ரோகித் சர்மா கேப்டனாக தனது முதல் தொடரையே முழுமையாக வென்று அசத்தியுள்ளார். இது ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சென்ற போது, இந்திய கிரிக்கெட்டில் கடும் பிரச்சினைகள் ஏற்பட்டன.

முழுநேர கேப்டன்
இதற்கு ஏற்றார் போல் பலம் குன்றிய தென்னாப்பிரிக்க அணியிடம் டெஸ்ட் மற்றும் ஒரநாள் தொடரை இந்தியா இழந்தது. இதனால் இனி இந்தியா அவ்வளவு தான் என்ற நெருக்கடியான கட்டத்தில் தான் ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் முழு நேர கேப்டனாக களமிறங்கினார்.

தோனி ஸ்டைல்
கேப்டனாக ரோகித் சர்மா அணிக்கு தேவையான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்தார். மேலும் சாஹல், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு ஊக்கம் அளித்து, வழிநடத்தினார். இது அவர்களது பந்துவீச்சை மேலும் ஜொலிக்க வைத்தது. ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஃபில்டர்களை நிறுத்தி விக்கெட்டுகளை தோனி போல் வீழ்த்தினார்.

நெகிழ்ச்சி
ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் நடுவர்கள் தவறான முடிவு வழங்கிய போது, ரோகித் சர்மா டி.ஆர்.எஸ். முடிவை பயன்படுத்தி, அதில் தோனியை போல் வெற்றியையும் கண்டார். கோப்பையை வென்ற போது ரோகித் சர்மா, அதனை நேரடியாக இளம் வீரர் ரவி பிஸ்னாயிடம் வழங்கி, வீரர்களுக்கு பின்னால் நின்று கொண்டார்.

ஒரே இந்திய கேப்டன்
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை ஓயிட்வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். மேலும் கேப்டனாக ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதம் 84.61ஆக உயர்ந்துள்ளது. இதனால் ரோகித் தலைமையில் இந்திய அணி மேலும் பல உயரங்களை தொடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications