Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

98 ரன்னில் மான்கட் ஆன ஷனாகா.. ரோகித் காட்டிய பெரிய மனசு.. அந்த விளக்கம் இருக்கே,, நீ வேற யா !

கவுகாத்தி : இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா செய்த சம்பவம் ஒட்டுமொத்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புத்தாண்டில் முதல் ஒருநாள் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் அதிரடி சதத்தால் 50 ஓவர் முடிவில் 373 ரன்களை குவித்தது.

இதில் ரோகித் சர்மா 83 ரன்களும், சுப்மான் கில் 70 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

நெகிழ்ச்சி சம்பவம்

நெகிழ்ச்சி சம்பவம்

எனினும் நிஷாங்கா அபாரமாக விளையாடி 72 ரன்கள் சேர்க்க கேப்டன் சனக்கா இறுதியில் அதிரடி காட்டி 108 ரன்களை குவித்தார்.இதனால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 306 ரன்களை எட்டியது. 200 ரன்களில் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது ஒரு பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரின் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது .

திரும்ப பெற்ற ரோகித்

திரும்ப பெற்ற ரோகித்

ஆட்டத்தின் 49.3 வது ஓவரின் ஷணக்கா 98 ரன்கள் எடுத்து எதிர் முனையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது முகமது ஷமி சனக்காவை மான்கட் முறையில் ரன் அவுட் ஆக்கினார். இதனை அடுத்து இது மூன்றாம் நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் உள்ளே நுழைந்த ரோகித் சர்மா தாங்கள் அப்பீல் செய்ய விரும்பவில்லை என்றும், இதனை திரும்ப பெறுவதாக கூறியதை எடுத்து சனக்கா மீண்டும் களத்தில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சனக்கா ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசி சதம் அடித்து அசத்தினார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த ரோகித் சர்மா, சனக்கா அபாரமாக விளையாடி சதத்திற்கு அருகே நின்றார். அவருடைய விக்கெட் எங்களுக்கு தேவை தான். ஆனால் மான்கட் முறையில் ஷனக்கா விக்கெட்டை எடுக்க நாங்கள் விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் அந்த அப்பிலை நாங்கள் திரும்ப பெற்றோம்.

எதிர்ப்பும், ஆதரவும்

எதிர்ப்பும், ஆதரவும்

நாங்கள் எவ்வாறு அவரது விக்கெடை எடுக்க வைத்தமோ அப்படி தான் நாங்கள் எடுக்க முயற்சி செய்வோம் என்று ரோகித் சர்மா விளக்கம் அளித்தார். ரோகித் சர்மாவின் இந்த செயலை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்று இருக்கிறார்கள். எனினும் மான் கட் முறையை ஐசிசி அனுமதி அளித்துள்ள நிலையில் ரோகித் சர்மா செய்தது தவறு என்று சில கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இது இந்தியாவின் நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டு இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, January 10, 2023, 23:10 [IST]
Other articles published on Jan 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+