For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் என்மேல நிறைய நம்பிக்கை வைச்சுருக்காரு... சூர்யகுமார் யாதவ் சிலிர்ப்பு!

டெல்லி : ஐபிஎல்லில் ரோகித் சர்மா தலைமையின்கீழ் மும்பை அணியில் பங்கேற்று விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

தற்போது இந்திய அணியின் டி20 தொடரில் இடம்பெற்றுள்ள அவர், ரோகித் சர்மா தன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தபோது, திட்டமெல்லாம் மிகவும் தெளிவாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர்

மும்பை இந்தியன்ஸ் வீரர்

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றார் சூர்யகுமார் யாதவ். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவரது பெயர் இடம்பெறாத நிலையில், அனைத்து தரப்பினரும் கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக் குழுவினைரை குற்றம் சாட்டிய சூழல் ஏற்பட்டது.

இடம்பிடித்த யாதவ்

இடம்பிடித்த யாதவ்

இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது. வரும் 12ம் தேதி துவங்கி 20ம் தேதிவரையில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. ஐபிஎல்லிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த சீசனில் பங்கேற்று விளையாடவுள்ளார் யாதவ்.

அதிகமான பாசிட்டிவ் எனர்ஜி

அதிகமான பாசிட்டிவ் எனர்ஜி

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா தன்மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளதாக சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார். ஸ்போர்ட்ஸ் டுடேவிற்காக பேசிய சூர்யகுமார் யாதவ், ரோகித்தின் நம்பிக்கையால் அதிகமான பாசிட்டிவ் எனர்ஜி தனக்கு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்த ஆதரவு

தொடர்ந்த ஆதரவு

தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தபோது, திட்டங்கள் அனைத்தும் மிகவும் தெளிவாக போடப்பட்டிருந்ததாகவும் தான் துவக்க வீரராக களமிறங்கி விளையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அணி வீரர்கள் தொடர்ந்து தன்னை ஆதரித்ததாகவும் தன்மீதும் தன்னுடைய திறமைமீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Monday, February 22, 2021, 14:31 [IST]
Other articles published on Feb 22, 2021
English summary
When I came to MI plan was crystal clear for me to bat in top order - Suryakumar Yadav
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+