தன்னோட ஆக்ரோஷத்த வெளியில காட்ட மாட்டாரு... ஆனா உள்ளுக்குள்ளே இருக்கும்... தினேஷ் கருத்து
டெல்லி : ஐபிஎல் 2021 சீசன் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் கேகேஆர் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் அணியின் குவாரன்டைனில் இணைந்துள்ளார்.
தொடர்ந்து அணியின் பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ள அவர், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பார்க்க பொறுமையானவராக தெரிந்தாலும் மிகவும் ஆக்ரோஷமானவர் என்று கூறியுள்ளார்.
ரோகித் தனது ஆக்ரோஷத்தை வெளியில் காட்ட மாட்டார் என்றாலும் தான் பங்கேற்கும் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

குவாரன்டைனை துவக்கிய கேகேஆர்
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கென அனைத்து அனைகளும் சிறப்பான வகையில் தயாராகி வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேகேஆர் அணி மும்பையில் தனது குவாரன்டைனை துவக்கியுள்ளது. இதில் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டி சென்னையில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது. ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ்அணியும் சென்னைக்கு தங்களது முகாமை மாற்றியுள்ளது.

ராகுலை போன்றவர் ரோகித்
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பார்ப்பதற்கு பொறுமையானவராக காணப்பட்டாலும் அதிகமான ஆக்ரோஷத்துடன் இருப்பவர் என்றும் அவர் சிறிதளவு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை போன்றவர் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

வெற்றிமீது விருப்பம்
மேலும் அவர் தன்னுடைய ஆக்ரோஷத்தை தன்னுடைய உடல்மொழியில் காண்பிக்க மாட்டார் என்றும் ஆனால் தான் பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற விரும்புவார் என்றும் தினேஷ் கார்த்திக் மேலும் கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா அந்த அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications