IND vs NZ: கேப்டன்சினா இதுதான்.. ரோகித் சர்மா செய்த மாற்றம்.. தொடக்க வீரர்களை காலி செய்த முகமது ஷமி!
மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முக்கியமான மாற்றத்தால், இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
உலகக்கோப்பை அரையிறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இதுதான் அதிகபட்சமாகும். இதனால் சாதனை இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி நியூசிலாந்து அணி அதிரடியாக தொடங்கியது. தொடர்ந்து சிராஜ் ஓவரிலும் பவுண்டரி அடிக்கப்பட்டது.

இதனால் 5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை சேர்த்திருந்தது. இதில் சிராஜ் வெறும் 2 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்த நிலையில், பும்ரா பந்தில் அதிக ரன்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இதனால் திடீரென சிராஜிற்கு 2 ஓவர்களுடன் நிறுத்திய ரோகித் சர்மா, உடனடியாக ஷமியை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
வழக்கமாக 8 ஓவர்களுக்கு பின் தான் முகமது ஷமி அட்டாக்கில் வருவார். ஆனால் பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால் இந்திய அணி சிக்கலில் சிக்கும் என்பதால், ஷமி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே நியூசிலாந்து அணியின் கான்வே 13 ரன்களில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலின் அபாரமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து முகமது ஷமி வீசிய 8வது ஓவரில் ரச்சின் ரவீந்திராவும் 13 ரன்களில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விக்கெட்டுகள் வரவில்லை என்பதை உடனடியாக உணர்ந்து ரோகித் சர்மா, முகமது ஷமி அட்டாக்கில் கொண்டு வந்ததன் மூலம் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால் ரோகித் சர்மாவின் முடிவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Click it and Unblock the Notifications