Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு பதில் யார்? டி20 உலககோப்பை பயிற்சி எப்படி..2 வாரம் முன்பே ஆஸி.செல்வது ஏன் ?ரோகித் பதில்

இந்தூர் : டி20 உலககோப்பை தொடருக்கு முன்பான இந்தியா விளையாடிய கடைசி போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் இந்தியா வென்றாலும், அணியில் சில குறைகள் இருக்கிறது.

இந்திய அணியில் பேட்டிங் மட்டும் தான் சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சு மற்றும் ஃபில்டிங் இன்னும் குறையாகவே இருக்கிறது.

அனுபவம்

அனுபவம்

இந்த நிலையில் இந்திய அணி நாளை டி20 உலககோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணி புறப்பட்டு செல்கிறது. 2 வாரத்திற்கு முன்பே ஏன் செல்கிறோம் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 7-8 வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்.

2 வாரம்

2 வாரம்

மற்றவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் புதியதாக விளையாட போகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் எப்படி விளையாட வேண்டும், எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளவே நாங்கள் 2 வாரத்திற்கு முன்பு ஆஸ்திரேலியா செல்கிறோம். அங்க பெர்த் மைதானத்தில் தான் பயிற்சி எடுக்க உள்ளோம்.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

அதற்கு காரணம், பெர்த் ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். அதில் விளையாடினால் பந்துகளை எப்படி எதிர்கொள்வத என்பது குறித்து அறிந்து, அதற்கு ஏற்ப நாங்கள் எங்களை தயார் படுத்தி கொள்வோம். அங்கு பயிற்சி மட்டுமல்லாமல், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியோடு 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

பும்ராவுக்கு பதில் யார்?

பும்ராவுக்கு பதில் யார்?

அத்துடன் மட்டுமல்லாமல் டி20 உலககோப்பைக்கு முன்பு ஐசிசி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் பயிற்சி போட்டியில் விளையாட ஏற்பாடு செய்து இருக்கிறது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு தான். அவருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. மற்ற வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. அவர்கள் அதனை பயன்படுத்தி கொள்வார்கள் என நம்புகிறேன்.

Story first published: Wednesday, October 5, 2022, 6:00 [IST]
Other articles published on Oct 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+