Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறந்த கோச் இவர்தான்.. அந்த ஆஸி. வீரரை கை காட்டிய ரோஹித்.. அப்ப கும்ப்ளே, ரவி சாஸ்திரி இல்லையா?

மும்பை : இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த பயிற்சியாளர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கை குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Rohit Sharma picks Ricky Ponting as best coach

அவர் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோரின் கீழ் தான் சிறந்த வீரராக மாறினார்.

ஆனால், அவர்கள் இருவரில் யாரையும் குறிப்பிடாமல், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங்கை குறிப்பிட்டுள்ளார்.

துவக்கத்தில் ரோஹித்..

துவக்கத்தில் ரோஹித்..

ரோஹித் சர்மா இந்திய அணியில் ஆல் - ரவுண்டராக சேர்க்கப்பட்டார். பின்வரிசை பேட்ஸ்மேன் ஆக மட்டுமே ஆடி வந்தார். பின்னர், ஒரு போட்டியில் மட்டும் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் அவர் ஆடிய அதிரடி ஆட்டம் அவரை நிரந்தர துவக்க வீரராக மாற்றியது.

பயிற்சியாளர்கள் பங்கு

பயிற்சியாளர்கள் பங்கு

அவர் சிறந்த துவக்க வீரராக மாறியதில் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பங்கு உள்ளது. அவர் உச்சகட்ட பார்மில் இருந்த காலங்களில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர்கள் அனில் கும்ப்ளே மற்றும் ரவி சாஸ்திரி.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்

ஆனால், இவர்கள் இருவரைக் காட்டிலும் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறிது காலம் ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியில் ஆடியதை குறிப்பிட்டு சிலாகித்து பேசி உள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ரிக்கி பாண்டிங், பாதி தொடரில் கேப்டன்சியை, ரோஹித் சர்மாவிடம் கொடுத்து இருந்தார்.

பேட்டியில் கூறினார் ரோஹித்

பேட்டியில் கூறினார் ரோஹித்

கெவின் பீட்டர்சன், இன்ஸ்டாகிராமில் எடுத்த பேட்டியின் போது, ரோஹித் சர்மாவிடம் சிறந்த பயிற்சியாளர் யார் என கேட்டு இருந்தார். அப்போது தான் ரோஹித் இது பற்றி பேசினார். முதலில் சிறந்த பயிற்சியாளரை தேர்வு செய்வது கடினம் என்றார்.

பாண்டிங் மேஜிக்

பாண்டிங் மேஜிக்

"ஒரு பெயரை கூறுவது கடினம். அவர்கள் அனைவரும் ஏதோ ஒன்று, அல்லது வேறு ஒன்றை எடுத்து வந்துள்ளார்கள். ஆனால், ரிக்கி பாண்டிங் என்னைப் பொறுத்தவரை மேஜிக்" என ரிக்கி பாண்டிங் பற்றி சிலாகித்து பேசினார் ரோஹித்.

அதை செய்ய உறுதி வேண்டும்

அதை செய்ய உறுதி வேண்டும்

"அவர் முதல் பாதியில் அணியை அதிரடியாக வழிநடத்தி விட்டு, பின் என்னிடம் கேப்டன் பதவியை கொடுத்ததை செய்ய அதிக உறுதி வேண்டும்" என பாண்டிங் பாதி தொடரில் கேப்டன் பதவியை தன்னிடம் கொடுத்ததை குறிப்பிட்டார்.

கேப்டன்சியிலும் வழி காட்டினார்

கேப்டன்சியிலும் வழி காட்டினார்

"அதன் பின் அவர் பயிற்சியாளராக இளம் வீரர்களுக்கு வழி காட்டியதோடு, எனக்கு கேப்டன்சியிலும் வழி காட்டினார். நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் முற்றிலும் வேறு விளையாட்டை விளையாடுகிறார்" என வியப்பை வெளிப்படுத்தினார் ரோஹித்.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

பின் ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகினாலும், கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். கேப்டனாக நான்கு ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார் ரோஹித் சர்மா. இது ஐபிஎல் வரலாற்றில் சிறந்த சாதனையாக உள்ளது.

பாண்டிங் பங்கு உள்ளது

பாண்டிங் பங்கு உள்ளது

அதே போல, ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார். பல முறை டி20 தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். அவரது சிறப்பான கேப்டன்சிக்கு ரிக்கி பாண்டிங்கும் ஒரு காரணம் என இந்த பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது.

Story first published: Sunday, April 5, 2020, 13:06 [IST]
Other articles published on Apr 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+