Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - அதிரடி வீரரை களமிறக்கும் ரோகித்.. CSK வை சமாளிக்க புது யுக்தி.. அணியை தலைக்கீழாக மாற்ற முடிவு

மும்பை : ஐபிஎல் தொடரில் கடந்த 2 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. மேலும் நடப்பு சீசனில் முதல் ஆட்டத்திலும் மும்பை அணி தோல்வியை தழுவியது. இதனால் சொந்த மண்ணில் வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் ரோகித் சர்மா களமிறங்குகிறார்.

மும்பை அணியின் டாப் வரிசை வீரர்களின் பார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இஷான் கிஷன், ரோகித், சூர்யகுமார் ஆகியோர் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைக்கீழ் மாற்ற உள்ளார்.

Rohit sharma plans to make numerous change in team vs csk

இஷான் கிஷன் இடத்தில் அதிரடி வீரர் கேமிரான் கிரீன் அல்லது டிவால்ட் பிராவீசை களமிறக்க ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளார். பிராவீஸ் உள்ளே வந்தால், டேவிட் வெளியேறிலாம். இதன் மூலம் இஷான் கிஷன், 3வது வீரராக விளையாட உள்ளார். இதே போன்று வேகப்பந்துவீச்சில் பெகுரண்டஃப்க்கு பதிலாக ரெய்லி மெர்டித் களமிறக்க ரோகித் திட்டம் போட்டுள்ளார்.

இதே போன்று , ஹிர்திக் சோகின் , பியூஷ் சால்வலா என சுழற்பந்துவீச்சாளர் போதும் என மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுக்கலாம். மேலும் ராமன்தீப் சிங் அல்லது குமாரா கார்த்திகேயாவுக்கும் ரோகித் முடிவு எடுக்கலாம்.

Story first published: Saturday, April 8, 2023, 6:35 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+