Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலர்கள் சொதப்பி விட்டார்கள்.. அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு.. தோல்வி குறித்து ரோகித் பேட்டி

மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 208 ரன்கள் குவித்தும் படுதோல்வியை தழுவியது.

Recommended Video

First T20 Matchல Indiaவ துவம்சம் செய்த Cameron Green யாரு?

கடைசி நான்கு ஓவரில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டபோது புவனேஸ்வர் குமார் 17வது ஒவ்வொரு 15 ரன்களும்

ஹர்சல் படேல் 18 வது ஓவரில் 24 ரன்களும் கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சு மோசம்

பந்துவீச்சு மோசம்

இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை. 200 ரன்களை எதிரணி சேஸ் செய்ய விடாமல் தடுக்க நல்ல ஸ்கோராகும். ஆனால் பில்டிங்கில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கி விட்டோம். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டனர்.

திருத்திக்கொள்ள வாய்ப்பு

திருத்திக்கொள்ள வாய்ப்பு

சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குறைகள், எங்கள் தவறுகளை திரும்பி பார்த்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் 200 ரன்கள் அடித்தாலும் கூட உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது.

திருப்புமுனை

திருப்புமுனை

நாங்கள் விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுடைய ஷாட்கள் பிரமாதமாக இருந்தது. நானும் இது போல் சேஸிங் செய்ய இருந்தால் இந்த இலக்கை எட்ட முடியும் தான் என்று நினைத்திருப்பேன்.கடைசி நான்கு ஓவரில் 60 ரன்கள் எட்ட வேண்டும் என்று இலக்கு இருந்தால் நாம் எதிரணி விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும்.

பந்துவீச்சில் மாற்றம்

பந்துவீச்சில் மாற்றம்

ஆனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை.ஆட்டத்தில் திருப்புமுனையாக அதைத்தான் நான் கருதுகிறேன். ஒரு விக்கெட் கூடுதலாக எடுத்து இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி ஆகியிருக்கும்.எப்போதும் உங்களால் 200 எண்கள் அடிக்க முடியாது. ஹர்திக் சிறப்பாக ஆடி எங்களுக்கு அந்த இலக்கை பெற்று தந்தார். நாங்கள் பந்துவீச்சில் அடுத்த போட்டிகள் சில மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Wednesday, September 21, 2022, 15:29 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+