நாங்க ஆட்டத்துல மட்டுமில்லீங்க... அன்ப காமிக்கறதுலயும் சூப்பர்தான்
அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 7 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையில் இந்த அணி முதலிடத்தில் உள்ளது.
அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் 216 ரன்களை இதுவரை இந்த சீசனில் குவித்துள்ளார். இதன் ஸ்டிரைக் ரேட் 137.57. மேலும் 2 அரைசதங்களையும் இவர் அடித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மா வெளியிட்டுள்ளார்.

முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய அணியை மட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தையும் முதலிடத்தில் வைத்துள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.

புகைப்படங்கள் வெளியீடு
இதேபோல தன்னுடைய குடும்பத்தினருடனும் மிகவும் அட்டாச்சாக உள்ளார் ரோகித் சர்மா. அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இவர் தனது மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் போடும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுவதுடன் ரசிகர்களின் மனதையும் அள்ளுகிறது.

மகளை கொண்டாடும் ரோகித்
தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் யூஏஇயில் உள்ளார் ரோகித் சர்மா. போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக பீச்சில் தன்னுடைய குடும்பத்தினருடன் செலவிட்ட ரோகித், அதை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். இதேபோல பல்வேறு புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தன்னுடைய மகளை தேவதையை போல கொண்டாடுகிறார் ரோகித்.

லைக்குகளை அள்ளிய புகைப்படம்
இந்நிலையில் தற்போது, தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரோகித் சர்மா. சிறப்பான பின்புலத்துடன் கூடிய இந்த புகைப்படத்திற்கு பேமிலி எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கும் வழக்கம்போல ரசிகர்கள் ஏராளமான லைக்குளை அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications