Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கியமான ஆட்டத்தை வேடிக்கை பார்த்தது வேதனை.. இது பேட்ட பாயுற நேரம்.. ரோகித் சர்மா தடாலடி பேச்சு

சௌதாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் விளையாடாமல் வேடிக்கை பார்த்தது வேதனையும், ஏமாற்றமும் அளிப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recommended Video

T20 World Cup-ல் Umran Malik? Rohit Sharma சொன்ன தகவல் *Cricket

இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி ஆட்டத்தை டிரா செய்தாலே இந்தியா வென்று இருக்கும்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக ரோகித் சர்மா பங்கேற்காத நிலையில், கடைசி டெஸ்டில் பும்ரா தலைமை தாங்க இந்திய அணி தோல்வியை தழுவியது.

வேதனையாக இருந்தது

வேதனையாக இருந்தது

இந்த நிலையில், இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் தற்போது தொடங்குகிறது. கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள ரோகித் சர்மா, கேப்டனாக திரும்புகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, நாட்டுக்காக மீண்டும் விளையாடுவது எப்போதும் பெருமையான விசயம். தொடரை தீர்மானிக்கும் போட்டியில் எதும் செய்ய முடியாமல் வெளியே நின்று பார்த்தது வேதனை அளித்தது.

சவால்கள் நிறைந்தது

சவால்கள் நிறைந்தது

ஆனால் ஏதுவும் நம் கையில் இல்லை. தற்போது டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இங்கிலாந்து தொடர் எப்போதும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். எங்களின் ஒரு கண் டி20 உலகக் கோப்பை மீது தான் உள்ளது. அதற்கான பயிற்சி தொடர் என்று கூற மாட்டேன். இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது.

வீரர்களுக்கான இடம்

வீரர்களுக்கான இடம்

பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என அனைத்து பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு, அணியில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதே தற்போது எங்களுடைய பணி. ஐபிஎல் தொடரிலும், உள்ளூர் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த இடம் அவர்களுக்கு உரிதானது.

உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு

உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு

உம்ரான் மாலிக்கை நிச்சயம் நிறைய போட்டிகளை நீங்கள் பார்ப்பீகள். இந்திய அணி, அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்த கொண்டு வருகிறார். இன்னும் சில வீரர்களுக்கு இனி வரும் போட்டிகளில் வாய்ப்பு தருவோம். உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசுகிறார். அவருடைய வேகம் எங்கள் அணிக்கு எப்படி உதவுகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, July 7, 2022, 12:46 [IST]
Other articles published on Jul 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+