Rohit Sharma: உன் பெயரே ஒரு வரலாறு.. மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் முதல் முறை.. ரோகித் மகத்தான சாதனை
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். தனது 231வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய அவர், மொத்தம் 6002* ரன்கள் சேர்த்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக, 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேக்கப் டஃபியை சிக்ஸர் அடித்து இந்தச் சாதனையை பூர்த்தி செய்தார்.
2011 ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த ரோஹித், 231 ஐபிஎல் போட்டிகளில் இந்த ரன்களை குவித்துள்ளார். மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், சூர்யகுமார் யாதவ் 116 போட்டிகளில் 3776 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். கிரண் பொல்லார்ட் 189 போட்டிகளில் 3412 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் மட்டுமின்றி, சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் 273 ரன்கள் எடுத்துள்ளார். இந்த இரண்டு தொடர்களின் ரன்களையும் சேர்த்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஒட்டுமொத்தமாக 6275* ரன்களைக் குவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக ரோஹித்தை விட அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி ஆவார். வான்கடேவில் நடந்த நடப்பு போட்டியின் முதல் பாதியில், ஆர்சிபி அணிக்காக 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த கோலி, பெங்களூரு அணிக்காக 271 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 8840 ரன்களை சேர்த்துள்ளார்.
2008 இல் ஆர்சிபி அணியில் இணைந்ததிலிருந்து, விராட் கோலி 286 டி20 போட்டிகளில் 9264 ரன்களைப் பதிவு செய்துள்ளார். ரோஹித் போலவே, கோலியும் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தவிர 15 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளிலும் பங்கேற்று தனது அணிக்கான ஈடு இணையில்லா பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications