Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனாக கம்பேக் கொடுக்கும் ரோகித் சர்மா.. ஹிட்மேனிடம் கோரிக்கை வைத்த அம்பானி.. என்ன நடந்தது?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. முதலில் திலக் வர்மாவின் பெயரை மும்பை அணியின் கேப்டன்சிக்கு ரோகித் சர்மா பரிந்துரை செய்துள்ளார். ஆனால் மும்பை அணி நிர்வாகம் கேட்டு கொண்டதால், ரோகித் சர்மா இந்த சீசனில் கேப்டனாக விளையாட ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்ட நிலையில், பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா, பவுலிங் பயிற்சியாளராக மெக்லனகன், ஃபீல்டிங் பயிற்சியாளராக திலீப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Rohit Sharma

அதுமட்டுமல்லாமல் மும்பை அணி 6 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன்சியை பறிக்க மும்பை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா தொடர்பான டிரேட் குறித்து மும்பை நிர்வாகம் இறுதி முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது.

முன்னதாக மும்பை அணியின் புதிய கேப்டனாக திலக் வர்மாவின் பெயர் அடிபட்டது. ஆனால் தற்போது மும்பை அணியின் புதிய கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணியின் பயிற்சியாளர்கள் நியமனம் தொடர்பாக ரோகித் சர்மாவிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தான் நியமனங்களும் நடந்துள்ளன.

இதன்பின் கேப்டன்சி தொடர்பான விவாதத்தில் திலக் வர்மாவின் பெயரை ரோகித் சர்மா பரிந்துரை செய்துள்ளார். ஆனால் திலக் வர்மாவுக்கு கூடுதல் அனுபவம் தேவை என்பதால், அவரை துணைக் கேப்டனாக நியமனம் செய்துவிட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக செயல்பட வைக்க மும்பை அணி நிர்வாகம் முயற்சித்துள்ளது.

இதனை ரோகித் சர்மா ஏற்றுக் கொண்டுள்ளார். ஒருவேளை ஹர்திக் பாண்டியாவின் டிரேட் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், அவர் ரோகித் சர்மாவுக்கு கீழ் விளையாடவும் ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து புறப்படுவதற்கு முன் ரோகித் சர்மாவுடன் மும்பை நிர்வாகம் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளது. அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவுக்கு 40 வயதை எட்டிவிடும் சூழலில், மும்பை அணி நிர்வாகத்தின் இந்த முயற்சி பலன் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Friday, October 30, 2026, 15:56 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+