Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெருக்கடியான சூழல்லயும் கூலா விளையாடுவாரு... அவரோட சக்சஸுக்கு அதுதான் காரணம்

புதுடெல்லி : ஐபிஎல்லின் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் எந்த பதட்டமும் இல்லாமல் சமாளிப்பார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் புகழ்ந்துள்ளார்.

ஐபிஎல் சீசன்களில் இதுவரை 4 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வென்று கொடுத்துள்ளார் ரோகித் சர்மா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் வெற்றி கொண்டுள்ளார்.

ஐபிஎல்லின் முதல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக முதன்முதலாக களமிறங்கிய ரோகித் சர்மா அதுமுதலே நெருக்கடியான சூழல்களை சமாளித்து வருவதாகவும் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

காலவரையின்றி ஒத்திவைப்பு

காலவரையின்றி ஒத்திவைப்பு

கடந்த 2008 முதல் ஐபிஎல் போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

4 கோப்பை வெற்றி

4 கோப்பை வெற்றி

கடந்த 2008 முதல் சீசனில் இருந்து இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார் முதல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். அப்போது முதல் போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்ப, மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பாக ஆடியதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியை சமாளிக்கும் திறன்

நெருக்கடியை சமாளிக்கும் திறன்

ஒவ்வொரு போட்டியை அடுத்தும், ஒவ்வொரு வெற்றியை அடுத்தும் ரோகித் சர்மாவின் தன்னம்பிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக லஷ்மன் தெரிவித்துள்ளார். எந்த நெருக்கடியான சூழல்களையும் சிறப்பாக சமாளிக்கும் திறமை ரோகித்துக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் அவர் சிறப்பான ஐபிஎல் கேப்டனாக மிளர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

109 ரன்கள் நாட்-அவுட்

109 ரன்கள் நாட்-அவுட்

இதுவரை ஐபிஎல்லின் 188 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 4,898 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 31.60ஆக உள்ளது. ஐபிஎல்லின் அதிகமான ரன் குவித்த வீரர்களில் ரோகித் மூன்றாவது நபராக உள்ளார். மேலும் ஒரு போட்டியில் 109 ரன்களை அடித்து அவுட்டாகாமல் உள்ளதும் இவரது சிறப்பான சாதனையாக உள்ளது.

Story first published: Friday, May 29, 2020, 16:41 [IST]
Other articles published on May 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+