வெஸ்ட் இண்டீசே கதிகலங்கும் அந்த பிளான்..! பலே கணக்குடன் காத்திருக்கும் சூப்பர் வீரர்
Recommended Video
போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு கலக்கு, கலக்க அதிரடி திட்டங்களை வைத்திருக்கிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா.
இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார். அந்த தொடரில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு ஒரே ஒரு இலக்கு தான் உள்ளது.
அதாவது ஒரு நாள் தொடரில் தாம் கதாநாயகன் என்று பலமுறை நிரூபித்துவிட்டார். ஆனால், டெஸ்ட் தொடர்களில் அவருக்கு இறங்கு முகம் தான். தொடர்ந்து சறுக்கலையே சந்தித்து வருகிறார்.

தடுமாறும் ரோகித்
அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க தடுமாறுகிறார். டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த கவனத்துடன் ஆடினால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். டெஸ்ட் போட்டிகளில் 2013ம் ஆண்டு அறிமுகமான ரோகித் சர்மா வாய்ப்புகளை அவ்வப்போதே பெற்று வருகிறார்.

உறுதியான இலக்கு
இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக ரன் குவித்து டெஸ்ட் போட்டிகளிலும் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு இந்த தொடரில் விளையாட இருக்கிறார். இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் வெறும் 1585 ரன்களை குவித்துள்ளார்.

பேட்டிங்கை மாற்ற வேண்டும்
பின்வரிசை வீரராக களமிறங்கும் ரோகித், களத்தின் சூழலை உணர்ந்து, அதற்கேற்ப தமது பேட்டிங்கை மாற்றி ஆட வேண்டும். இந்த டெக்னிக்கை பயன்படுத்தினால் போதும். டெஸ்ட் போட்டிகளிலும் அவரது இடம் உறுதி ஆகும். அதற்காக பல திட்டங்களை வைத்திருப்பதாக தெரிகிறது.

2 ஆண்டுகள் சூப்பர்
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடிய ரோகித் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளாக கலக்கு, கலக்கு என்று கலக்கி வரும் ஹிட் மேன், ரோகித் இனி டெஸ்ட் தொடரிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications