தனி ஆள் இல்ல.. தோப்புடா..!! நாட்டுக்காக ஆடுபவன்..!! கோலியை வம்பிழுத்து ரோகித் வெளியிட்ட ட்வீட்..!!
Recommended Video
வாஷிங்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர் தொடங்க உள்ள நிலையில், ஹிட் மேன் ரோகித் சர்மா ஒரு டுவீட், பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
உலக கோப்பை நிச்சயம் இந்தியாவுக்கு தான் என்று ரசிகர்கள் எதிர் பார்த்திருக்க, நியூசி லாந்திடம் செமி பைனலில் தோற்றது. இந்தியாவின் உலக கோப்பை பயணம் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே, அணிக்குள் பிளவு இருப்பதாக செய்திகள் கசிந்தன.
ரோகித் தந்த யோசனைகளை கோலி கேட்கவில்லை, அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோகித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியானது. இதனால், கோலி, ரோகித் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டது.

அன்பாலோ
கடந்த வாரம், கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவை ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்தார். இந்தச் செய்தி வேகமாக பரவி, கோலி - ரோகித் இடையே சண்டை என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

பிரச்னை கிடையாது
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோலி, ரோகித் சர்மாவுடன் எந்த பிரச்னையும் இல்லை என்றார். இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் யார் பயனடைகிறார்கள் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், அணி வீரர்களுடன் கோலி செல்பி எடுத்த போது அதில் ரோகித் இல்லை. அவர் தவானுடன் இருந்த செல்பி படத்தை வெளியிட்டிருந்தார்.
ரோகித் டுவிட்
இந்நிலையில், ரோகித் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, இணையத்தில் வைரலாகி உள்ளது. எப்போதும் நாடு பற்றி வெளிக்காட்டிக் கொள்ளாத ரோகித், திடீரென நான் ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் அணிக்காக வருவதில்லை, நாட்டிற்காக தான் வருகிறேன் என்பது போல் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

இந்த செய்தி யாருக்காக?
இதுபோன்று குறிப்புடன் யாருக்காக அவர் பதிவு செய்துள்ளார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் இது மறைமுகமாக அணியில் யாரும் எனக்கு பெரியவர்கள் இல்லை, நான் நாட்டுக்காக ஆடுபவன் என்பதை குறிக்க இவ்வாறு பதிவிட்டுள்ளரா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications