Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பௌலிங் போடறதுல அவர் இன்னும் சிறப்பா இல்லை... பிட்டாவும் இல்லை.. ரோகித் சர்மா திட்டவட்டம்

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிட்னசில் இன்னமும் சிறப்பாக இல்லை என்று அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் தன்னுடைய முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து அவதியுற்று வருகிறார். இதற்கென கடந்த ஆண்டில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பௌலிங் செய்வதில் சிறப்பாக உணரவில்லை என்றும் ஆனால் இந்த விஷயத்தில் அவரது சொந்த முடிவுக்கே விட்டுவிட்டதாகவும் ரோகித் மேலும் கூறினார்.

இன்று இறுதிப்போட்டி

இன்று இறுதிப்போட்டி

ஐபிஎல் 2020 தொடர் இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் தனது ஐந்தாவது கோப்பையை வெல்லும் தீவிரத்தில் மும்பை அணி உள்ளது.

முதுகுவலியால் அவதி

முதுகுவலியால் அவதி

மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உள்ளார். ஆயினும் கடந்த 2018 முதல் அவர் தனது முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் அவர் தனது அறுவை சிகிச்சையை மேற்கொண்டு பிட்னசை நிரூபித்துள்ளார். நியூசிலாந்து தொடரிலும் இடம்பெற்றார்.

சிறப்பான பௌலிங் இல்லை

சிறப்பான பௌலிங் இல்லை

ஆயினும் அவர் இன்னும் முழுமையான பிட்னசில் இல்லை என்றும் சிறப்பான பௌலிங்கை போடவில்லை என்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஆயினும் பௌலிங் போடுவது குறித்து அவரது சொந்த முடிவிற்கே விட்டு விட்டதாகவும் ரோகித் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி அளிக்க விரும்பவில்லை

நெருக்கடி அளிக்க விரும்பவில்லை

ஒவ்வொரு 4 போட்டிகளுக்கும் இடையில் ஹர்திக்கின் பிட்னஸ் குறித்து தொடர்ந்து அணி நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும் இதுகுறித்து அவரிடம் பேசி வருவதாகவும் ரோகித் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் அவருக்கு எந்த நெருக்கடியையும் அளிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஹர்திக் சிறப்பாக ஆடவேண்டும்

ஹர்திக் சிறப்பாக ஆடவேண்டும்

மேலும் ஹர்திக் பாண்டியா தங்களது அணிக்கு மிகவும் முக்கியமான பேட்ஸ்மேன் என்றும், இன்று இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அவரது பேட்டிங் மிகவும் தேவையானது என்றும் கூறியுள்ளார். அவர் ஆடும்வரையில் சிறப்பாக ஆடட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 10, 2020, 10:23 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+