Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிவை கொஞ்சமாவது பயன்படுத்து.. முகமது சிராஜை கடுப்பாகி திட்டிய ரோகித் சர்மா.. என்ன நடந்தது?

சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடுப்பாகி முஹமது சிராஜை திட்டிய சம்பவம் அரங்கேறியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் அபார சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக தடுமாறினர்.

Rohit sharma scolds Mohammed siraj for bad bowling in ind vs aus wc match

இதில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா இரண்டு விக்கெட்களையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 140 ரன்கள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஸ்திரேலியாவை 160 ரன்கள் சுருட்டி விடலாம் என ரோகித் சர்மா எதிர்பார்த்தார்.

ஏனென்றால் 10 அணிகள் மோதும் இந்த தொடரில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிக்கு தான் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். அப்போது ரன் ரேட் மிகவும் முக்கியம் என்பதால் ஆஸ்திரேலியாவை குறைவான இலக்கில் சுருட்டி வேகமாக சேஸ் செய்தால் இந்தியாவின் ரன் ரேட்டும் ஏறும். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கீழ் வரிசை வீரர்கள் பொறுமையாக விளையாட இந்திய பவுலர்களை வெறுப்பேற்றினர்.

Rohit sharma scolds Mohammed siraj for bad bowling in ind vs aus wc match

இதில் முகமது சிராஜ்,ஹர்திக் பாண்டியாவையும் கடைசி கட்டத்தில் ரோகித் சர்மா பயன்படுத்தினார். அப்போது ரோகித் சர்மா பீல்டர்களை Fine leg திசையில் நிறுத்தி வைத்திருந்தார். பேட்ஸ்மேனுக்கு நேராக லாங் ஆன், லாங் ஆப் பில்டர்கள் ஏதும் நிறுத்தப்படவில்லை. இப்படி பில்டிங்கை நிறுத்தினால் அதற்கு தகுந்தார் போல் தான் பந்து வீச வேண்டும்.

ஆனால் முகமது சிராஜ் நேராகப் பந்து வீச அதனை ஸ்டார்க் மிட் ஆஃப் திசையில் பவுண்டரி அடித்தார். இதனை பார்த்து கடுப்பான ரோகித் சர்மா கொஞ்சமாவது அறிவை பயன்படுத்தி பந்து வீசு என கையாலே செய்கையை காட்டினார். மேலும் சிராஜுடன் நேராக சென்று பில்டரை நான் உனக்கு எங்கே நிறுத்தினேன் நீ எங்கு பந்து வீசுகிறாய் என கூறினார். அதற்கு சிராஜ் விளக்கம் அளித்தார். எனினும் இதன் அடுத்த பந்திலே ஸ்டார்க் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். ஆடுகளம் மிகவும் தொய்வாக இருப்பதால் சில சமயம் 200 ரன்கள் சேசிங் செய்ய கடினமாகிவிடும் என்பதால் ரோகித் சர்மா இவ்வாறு கோபப்பட்டு இருக்கலாம்.

Story first published: Sunday, October 8, 2023, 18:33 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+