Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன் லாஸ்ட் டான்ஸ்.. கடைசி சீசனில் கேப்டனாக களமிறங்கும் ரோகித் சர்மா.. சமாதானப்படுத்திய ஆகாஷ் அம்பானி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அடுத்த ஒரு சீசனில் மட்டும் விளையாடக் கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ரோகித் சர்மா அடுத்த ஆண்டு 40 வயதை எட்டிவிடுவார் என்பதால், ரோகித் சர்மாவின் கடைசி சீசனாக 2027 ஐபிஎல் தொடர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் 6 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாமல் மும்பை அணி திணறி வருகிறது. 2020 ஐபிஎல் தொடருக்கு பின் ரோகித் சர்மா 3 சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறினார். இதன்பின் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்த போதும் மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. தற்போது மொத்த பயிற்சியாளர் குழுவையும் மும்பை நிர்வாகம் மாற்றி இருக்கிறது.

Rohit Sharma

தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட், பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா, பவுலிங் பயிற்சியாளராக மெக்லனகன் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடக்கவில்லை. மாறாக ரோகித் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

ரோகித் சர்மாவின் பரிந்துரை அடிப்படையின் தான் இந்த நியமனங்கள் நடந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டனாக செயல்பட மும்பை அணி நிர்வாகம் சம்மதிக்க வைத்துள்ளது. நியூசிலாந்து புறப்படுவதற்கு முன் ரோகித் சர்மா மும்பை நிர்வாகிகளுடன் ஆலோசனையில் இருந்தார். இறுதியாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட சம்மதித்துள்ளார்.

இதனால் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா கம்பேக் கொடுக்க உள்ளதாக அந்த அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார். இதனால் அடுத்த சீசன் தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஒன் லாஸ்ட் டான்ஸ் என்று ரோகித் சர்மா கடைசி சீசனில் கேப்டனாக ஓய்வு பெறுவார் என்று பார்க்கப்படுகிறது. அதன்பின் மெகா ஏலம் வரும் என்பதால், ரோகித் சர்மா மும்பை அணியால் தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை. இதனால் மும்பை அணியின் ஆலோசகர் பதவியில் ரோகித் சர்மா அமர வைக்கப்படலாம் என்றும் பேச்சுகள் அதிகரித்துள்ளன.

Story first published: Saturday, October 31, 2026, 21:58 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+