Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட், இஷாந்த் இல்லைன்னா என்னங்க... அணி இருக்குதுல்ல.. யாரையும் சார்ந்து அணி இல்ல... சச்சின்

மும்பை : விராட் கோலி மற்றும் இஷாந்த் சர்மா உள்ளிட்டவர்கள் டெஸ்ட் தொடரில் இல்லையென்றாலும் அணி கண்டிப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தனிநபரை சார்ந்து அணி எப்போதும் இருக்காது என்றும், காயம் காரணமாக வீரர்கள் வெளியேறும்போது அணி அவர்கள் இல்லாததை தாண்டி செயல்படுவது தான் வழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய பிட்னஸ் சோதனைகளை பூர்த்தி செய்து, தற்போது ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாரில்லையென்றாலும் அணி இருக்கும்

யாரில்லையென்றாலும் அணி இருக்கும்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு போட்டியை அடுத்து கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பவுள்ளார். இதேபோல இஷாந்த் சர்மாவும் அணியிலிருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யார் இல்லையென்றாலும் அணி கண்டிப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.

சச்சின் திட்டவட்டம்

சச்சின் திட்டவட்டம்

கோலி, இஷாந்த் இல்லாமல் ஆஸ்திரேலியாவை இந்தியா டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்வது கடினம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில், தனி நபரை சார்ந்து அணி எப்போதுமே செயல்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி இளம் வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அதுபோல நினைக்க வேண்டும்

அதுபோல நினைக்க வேண்டும்

அணியின் முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவர் இல்லாமல் எவ்வாறு டீம் செயல்படுமோ அதுபோல நினைத்துக் கொண்டு கோலி இல்லாத சூழலில் செயல்பட வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் அணியின் முக்கிய பௌலராக அனில் கும்ப்ளே இருந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டபோது அவர் இல்லாமல் டெஸ்ட் பேட்டியை எதிர்கொண்டதையும் சச்சின் நினைவு கூர்நதுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்

ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்

மேலும் தன்னுடைய பிட்னஸ் சோதனைகளை முடித்திருந்தால் தற்போது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் இருந்திருக்க வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ரோகித் சர்மாவின் பிட்னஸ் பரிசோதனை வரும் 11ம் தேதி எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 9, 2020, 18:58 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+