For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா செய்தது மிகப் பெரிய தவறு.. தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தாக்கு

மும்பை : இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது t20 போட்டி சமனில் முடிவடைந்தது. இரண்டு முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இந்த போட்டி முடிவடைந்து சில நாட்கள் ஆகியும் இதில் பல விவாதங்களும் சர்ச்சைகளும் தற்போது எழுந்த வண்ணம் உள்ளது.

இதில் ரோகித் சர்மா செய்த ஒரு காரியம் குறித்து தற்போது கேள்வி எழுப்பி உள்ளார். இதில் முதல் சூப்பர் ஓவரின் போது இந்திய அணிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரோகித் சர்மா 14 ரன்கள் அடித்து விட்டு கடைசி பந்தில் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக தான் ரிட்டய்ட் அவுட் ஆனார்.

Rohit sharma should not play after getting retired out in super over says ab devilliers

எனினும் இரண்டாவது சூப்பர் ஓவர் வந்தபோது மீண்டும் பேட்டிங் செய்ய ரோகித் சர்மா களத்திற்கு வந்தார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ் இரண்டு சூப்பர் ஓவர் கடைப்பிடிப்பது என்பது நிச்சயம் நம்பவே முடியவில்லை. அதேசமயம் நீங்கள் டிக்ளேர் அவுட் ஆன பிறகு இரண்டாவது முறை உங்களால் பேட்டிங் செய்ய முடியாது.

ஆனால் ரோகித் சர்மா எப்படி பேட்டிங் செய்ய வந்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை ரிட்டையர்டு அவுட்டுக்கு பதிலாக ரிட்டர் ஹட் ஆகி இருக்கலாம். அதேபோல் ரிங்குசிங் பிரமாதமான வீரராக திகழ்கிறார். இந்திய அணிக்கு மேட்ச் வின்னராக இருக்கிறார். அவர் தொடர்ந்து ஒரே மாதிரியாக சிறப்பாக விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

எப்போதுமே ஒரே மாதிரி விளையாடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதுதான் நல்ல வீரருக்கு அழகு என்று ரிங்கு சிங்கை பாராட்டியுள்ளார். இந்திய அணிக்காக 11 இன்னிங்ஸ் விளையாடி 356 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 89 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 176 என்ற அளவில் இருக்கிறது. இதுவரை இரண்டு அரை சதம் அடித்து இந்திய அணியின் ஃபினிஷராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 22, 2024, 15:26 [IST]
Other articles published on Jan 22, 2024
English summary
Rohit sharma should not play after getting retired out in super over says ab devilliers ரோகித் சர்மா செய்தது மிகப் பெரிய தவறு.. தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தாக்கு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+