For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.. பெற்றோரை நெகிழ வைத்த ரோகித் சர்மா..மும்பை வான்கடேவில் ஸ்டாண்ட் திறப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக விளங்கிய ரோகித் சர்மா அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தோனிக்கு பிறகு அதிக ஐசிசி கோப்பைகளை வென்று தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகள் ரோகித் சர்மா பெயரில் இருக்கிறது. இந்த தருணத்தில் ரோகித் சர்மா மும்பை கிரிக்கெட்டுக்காக ஆடியவர்.

அவருடைய பூர்வீகம் ஆந்திராவாக இருந்தாலும், சிறுவயதிலே மும்பையில் வந்து தங்கி பயிற்சி பெற்று மும்பை ரஞ்சி அணியில் இடம் பிடித்து இந்திய அணிக்காக 2007 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் சாதனைகளை பாராட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திரா பட்ணாவிஸ் கேலரி திறக்க இருந்தார். அப்போது ரோகித் சர்மா தனது பெற்றோரையும் அழைத்து வந்து மேடை ஏற்றி அவர்களையும் சேர்த்து இந்த கேலரியை தொடங்க வைத்தார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

ரோகித் சர்மாவின் பெயரை பார்த்தவுடன் அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த நிகழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் அமர்ந்திருந்தனர். ரோகித் சர்மாவுக்கு சூரியகுமார் யாதவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டனாக விளங்கும் ரோகித் சர்மா பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக அவர் பாராட்டியுள்ளார்.

வான்கடே மைதானத்திற்கு உள்ள ஒரு கேலரிக்கு உங்கள் பெயர் சூட்டப்பட்டு இருப்பதன் மூலம் தற்போது வான்கடே மைதானம் மேலும் புகழை அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மைதானத்தில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கும் ஸ்டாண்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 499 போட்டிகள் விளையாடி 19700 ரன்கள் அடித்திருக்கிறார் இதில் 49 சதமும் 108 அரை சதமும் அடங்கும் ஒட்டுமொத்தமாக அவர் 637 சிக்ஸர்களை அடித்துள்ளார் 20,000 கண்கள் தொடர் வெறும் 300 ரன்கள் 50-வது சதம் எடுக்க ஒரு சதமும் தேவைப்படுகிறது அது மட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா சார்பாக அதிக சிக்ஸர்கள் விலாசியவர் ரோகித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 16, 2025, 21:51 [IST]
Other articles published on May 16, 2025
English summary
Rohit sharma stand Unveiled in Mumbai wankhade stadium by his Parents
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+