Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை, ஐபிஎல் ரெண்டுமே ஆடணும்... ரோகித் சர்மா விருப்பம்

மும்பை : டி20 உலக கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் இரண்டையும் இந்த ஆண்டிலேயே தான் விளையாட விரும்புவதாக இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sourav Ganguly recalls Dhoni's winning shot in World cup 2011

ரசிகர்களுடன் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் சாட் நிகழ்ச்சியில் பேசிய ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆகியோரின் ஆட்டத்தை காண பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் கேப்டன் தோனியை ஒரே வார்த்தையில் வர்ணிக்கும்படி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, அவர் ஒரு ஜாம்பவான் என்று தெரிவித்துள்ளார்.

முன்னணி வீரர் ரோகித்

முன்னணி வீரர் ரோகித்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடிவரும் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலிக்கு இணையாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருகிறார். அணியில் துவக்க வீரர் என்ற தன்னுடைய நிலையை விட்டுக் கொடுக்காமல் விளையாடி வருகிறார் ரோகித் சர்மா.

இன்ஸ்டா நேரலையில் பங்கேற்பு

இன்ஸ்டா நேரலையில் பங்கேற்பு

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ரோகித் சர்மா, இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது டி20 உலக கோப்பை மற்றும் ஐபிஎல் இரண்டிலும் இந்த ஆண்டே விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் அவர் தனது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 4 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித், ஜேசன் ராய் ஆட்டம் பிடிக்கும்

ஸ்மித், ஜேசன் ராய் ஆட்டம் பிடிக்கும்

முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப்பிலும் விளையாடியுள்ள ரோகித் சர்மா, அவர் குறித்து ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தோனி ஒரு ஜாம்பவான் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆகியோரின் ஆட்டங்களை காண தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

வீடியோ, புகைப்படங்கள் வெளியீடு

வீடியோ, புகைப்படங்கள் வெளியீடு

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ரோகித் சர்மா, இத்தகைய இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சியில் தனியாகவும், மற்ற வீரர்களுடன் இணைந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில், பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்து தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Story first published: Sunday, June 14, 2020, 21:32 [IST]
Other articles published on Jun 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+