தோனியை தொடரும் ரோகித் சர்மா... 200வது ஐபிஎல் போட்டியில் வெற்றியை பரிசளிப்பாரா?
துபாய் : இன்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.
இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 200வது போட்டி. இந்த சீசனில் இந்த சாதனையை தோனி எட்டிய நிலையில், 2வது வீரராக ரோகித் சர்மா இந்த சாதனையை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவர் 3000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 43 ரன்களே தேவைப்படுகிறது.

இன்று இறுதிப்போட்டி
ஐபிஎல் 2020 சீசனின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மிகவும் தீவிரமாக பங்கேற்கவுள்ளன. டைட்டிலை வெல்ல இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன.

ரோகித்தின் 200வது போட்டி
இந்நிலையில் இன்றைய போட்டி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் தன்னுடைய 200வது போட்டியில் விளையாடவுள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே கேப்டன் தோனியும் இந்த சாதனையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 3000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 43 ரன்களே மீதமுள்ளன.

5162 ரன்கள் குவிப்பு
இதுவரை 199 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 5162 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 31.09ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 130.58. அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் அவுட் ஆகாமல் 109 ரன்களை அடித்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் போட்டிகளில் 38 அரைசதங்களையும் ரோகித் சர்மா பூர்த்தி செய்துள்ளார்.

453 பவுண்டரிகள்... 209 சிக்ஸ்கள்
மேலும் ஒரு சதத்தையும் அவர் அடித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் 453 பவுண்டரிகளையும் 209 சிக்ஸ்களையும் அவர் அடித்துள்ளார். தன்னுடைய அணிக்காக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இதில் அணியின் கேப்டனாக மட்டுமே 4 ஐபிஎல் கோப்பைகளை பெற்றுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.


Click it and Unblock the Notifications