சச்சின் 'முட்டை' வாங்கினாலும் அரை இறுதிக்கு முன்னேறியது மும்பை
டெல்லி: கேப்டன் ரோஹித் சர்மாவின் அருமையான அரை சதத்தின் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நேற்று டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பைக்கு வெற்றி கிட்டியது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தி்ல மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

24 பந்துகளில் அரை சதம்
ரோஹித் சர்மா அபாரமாக ஆடினார். 24 பந்துகளைச் சந்தித்த அவர் 51 ரன்களைக் குவித்தார். கடைசி வரை ஆட்டமும் இழக்கவில்லை.

வேயன் ஸ்மித்தும் வெளுத்தார்
அதேபோல வேயன் ஸ்மித்தும்அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 25 பந்துகளைச் சந்தித்த அவர் 48 ரன்களைக் குவித்தார்.

40 பந்து மிச்சம் வச்சு வெற்றி
வெற்றி இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 40 பந்துகள் மீதம் வைத்து சந்தித்தது.

கட்டாயம் வென்றாக வேண்டிய நிலை
மும்பை அணி நேற்று கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருந்தது. மேலும் 14.2 ஓவர்களில் தனது வெற்றியைப் பெற வேண்டிய சிக்கலிலும் அது இருந்தது. இருப்பினும் தனது வெற்றியை 13.2 ஓவர்களிலேயே அது பெற்று கரை சேர்ந்தது.

முட்டையுடன் வெளியேறிய சச்சின்
நேற்றைய போட்டியிலும் சச்சின் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றினார். ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார் சச்சின்.


Click it and Unblock the Notifications