'மார்டன் கிரிக்கெட்டில்.. பெஸ்ட் ஆல் ரவுண்டர் அவர்தான்..' சிஎஸ்கே வீரரை புகழ்ந்து தள்ளி ஜாம்பவான்
துபாய்: தற்காலத்து மார்டன் கிரிக்கெட் யூகத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தான் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களாக உள்ளனர் என்று நெதர்லாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரியான் பத்து டோஷேட் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தற்காலத்து கிரிக்கெட் யுகத்தில் ஒவ்வொரு அணியிலும் உள்ள ஆல்ரவுண்டர்கள் அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். குறிப்பாக டி20 போட்டிகளில் பல்வேறு சூழ்நிலைகளில் ஆல் ரவுண்டர்களே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில், தற்காலத்து மார்டன் கிரிக்கெட் யுகத்தில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களாக யார் என்பது குறித்து நெதர்லாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரியான் பத்து டோஷேட் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜடேஜா
ஜடேஜா போன்ற ஒருவர் அதிக ரன்கள் எடுக்கும் நபராகவே அல்லது அதிக விக்கெட் எடுக்கும் நபராகவோ இருக்க மாட்டார் என்றாலும் கூட, சிறிய கேமியோ (cameo) இன்னிங்கிஸில் அவர் அட்டகாசமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி தனது அணியின் வெற்றியை உறுதி செய்யும் ஆற்றல் அவருக்கு உள்ளது என்று டோசேட் கூறினார். இது குறித்து ஜடேஜா மேலும் கூறுகையில், "ஜடேஜாவால் ஆட்டத்தை மாற்றியமைக்க முடியும். அவர் டாப் ரன் ஸ்கோரராகவோ அல்லது டாப் பந்துவீச்சாளராகவோ இருக்க முடியாமல் போகலாம்.

ஆட்டத்தை மாற்றுவார்
ஆனால், நிச்சயமாக ஆட்டத்தை மாற்றும் திறன் அவருக்கு உள்ளது. 16 பந்துகளில் அவரால் 37 ரன்கள் என்பது போல அவரால் அதிரடியாக ரன்கள் எடுக்க முடியும். 120 ரன்களுக்கு 5 விக்கெட் என்று இருக்கும் போது ஜடேஜா இறங்கினால் 160/170 வரை கூட அவரால் எடுக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஆல் ரவுண்டர் திறன் குறித்தும் ரயான் டென் டோஷேட் பாராட்டியுள்ளார். 41 வயதான டோஷேட், ஷாகிப் அல் ஹசன் 2019 உலகக் கோப்பையின் போது தான் எவ்வளவு மதிப்பு மிக்கவர் வீரர் என்பதை நிரூபித்தார். மேலும், அந்த சமயத்தில் வங்கதேசம் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவராகவும் அவர் திகழ்ந்தார்.

ஷகிப் அல் ஹசன்
இது குறித்து ரியான் பத்து டோஷேட் மேலும் கூறுகையில், "கடந்த உலகக் கோப்பையில் (2019) ஷகிப்பின் ஃபார்ம் அட்டகாசமாக இருந்தது. அந்த தொடரில் அவர் முன்னணி ரன் ஸ்கோரராக இருந்தார், அவர் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அதில் நிரூபித்துக் காட்டினார். ஜடேஜா போன்ற ஒருவர், நான் சொன்னது போல் பெரிய ரன்களை எடுக்காமல் இருக்கலாம். ஆனால் போட்டியின் எந்தவொரு நிலையிலும் அவரால் ஆட்டத்தைப் புரட்டிப்போட முடியும்.

பெரிய தொடர்கள்
அதுவும் குறிப்பாக ஐபிஎல், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அவரை போன்ற ஆல் ரவுண்டர்களின் பங்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும். எனவே என்னைக் கேட்டால் இந்த மார்டன் கிரிக்கெட் யுகத்தின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்கள்" என்று அவர் தெரிவித்தார். ரியான் டென் டோஷேட் நெதர்லாந்துக்காக 33 ஒருநாள் மற்றும் 22 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 1541 ரன்களையும் டி 20 கிரிக்கெட்டில் 533 ரன்கள் குவித்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் ஒருநாள் போட்டிகளில் 55 விக்கெட்களையும் டி20 தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிஎஸ்கே அணி
ஜடேஜா தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு மொத்தம் ஜடேஜா மொத்தம் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசனில் ஒரு அரை சதத்துடன் ஜடேஜா 212 ரன்கள் குவித்துள்ளார். மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 152ஆக உள்ளது. இது தவிர பவுலிங்கிலும் கணிசமான பங்களிப்பைத் தரும் அவர், 10 விக்கெட்களையும் எடுத்துள்ளார். அவரது பவுலிங் சராசரி 27ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications