Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs AUS: 99 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா.. மார்கோ யான்சன் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி பவுமாவின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது.

SA vs AUS

இதில் தென்னாப்பிரிக்க பவுலர்களின் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக மார்க்கோ யான்சன் மற்றும் ரபடா ஆகியோர் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

கிங் பவுமா.. இதுதான்டா என் பெயர்.. ஒற்றை ஆளாக நின்று ஆஸ்திரேலியா பவுலர்களை அசரடித்த கேப்டன்!

கிங் பவுமா.. இதுதான்டா என் பெயர்.. ஒற்றை ஆளாக நின்று ஆஸ்திரேலியா பவுலர்களை அசரடித்த கேப்டன்!

தொடக்க வீரர் நிக் மேட்டின்சன் டக் அவுட் ஆகி வெளியேற அந்த அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். மார்னஸ் லாபஸ்சென் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 28 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய மாட் ரீன்ஷா 12 ரன்களிலும், அலெக்ஸ் கேரி டக் அவுட் ஆகியும் பெவிலியன் திரும்பினர். கேப்டன் பாட் கம்மின்ஸ், 13 ரன்களிலும் மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும், ஹேசல்வுட் இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.இதனால் ஆஸ்திரேலிய அணி வெறும் 42.3 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

SA vs AUS: 60 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த மார்கோ யான்சன்.. 8வது இடத்தில் களமிறங்கி அபாரம்

Also Read

SA vs AUS: 60 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த மார்கோ யான்சன்.. 8வது இடத்தில் களமிறங்கி அபாரம்

சிறப்பாக பந்துவீசிய தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சன் 11 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரபாடா 33 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வியான் முல்டரும் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி 326 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 19 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருக்கிறது.

Story first published: Wednesday, October 21, 2026, 19:11 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+