8 ஆண்டுகளில் அதிக ரேட் பெற்ற டெஸ்ட் எது தெரியுமா.. நம்ம சச்சினின் கடைசி போட்டிதான்!
மும்பை: கடந்த எட்டு ஆண்டுகளில் டிவி ஒளிபரப்பில் அதிக ரேட்டிங் பெற்ற டெஸ்ட் போட்டியாக, சச்சின் டெண்டுல்கரின் கடைசிப் போட்டி உருவெடுத்துள்ளது.
இந்தப் போட்டிக்குத்தான் டிவியில் அதிக ரேட்டிங் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவிதான் சச்சினின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.

1739 புள்ளிகள்
சச்சினின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 1739 புள்ளிகள் ரேட்டிங் கிடைத்துள்ளது.

2005க்குப் பிறகு இப்போதுதான்
2005ம் ஆண்டு்குப் பின்னர் ஒரு டெஸ்ட் போட்டிக்கு, அதிக அளவிலான ரேட்டிங் கிடைத்தது இப்போதுதானாம்.

4 சானல்களில் நேரடி ஒளிபரப்பு
சச்சினின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது நான்கு சானல்களில் ஒளிபரப்பியது. அதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சானலில் இந்தியில் நேரடியாக ஒளிபரப்பானது. மற்ற மூன்று சானல்களிலும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பினர். மேலும் தனது இணையதளம் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பியது.

30.5 லட்சம் விசிட்டர்கள்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலின் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஒளிபரப்பை 30.5 லட்சம் விசிட்டர்கள் பார்வையிட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications