ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி என்ற காட்டாறு கடந்த சில நாட்களாக அமைதியாக ஓடியது. இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் தன்னுடைய முழு சக்தி என்ன என்பதை விராட் கோலி இன்று ரசிகர்களுக்கு காட்டிவிட்டார்.
விராட் கோலியின் இந்த ஆட்டத்தை பார்த்து 100 சதங்களை அடித்த சச்சினே சில்லறைகளை சிதற விட்டிருக்கிறார். விராட் கோலியின் இந்த ஆட்டத்திற்கு பல்வேறு வீரர்களும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தனது முதல் பந்தில் கவர் டிரைவ் ஆடியதை பார்த்தவுடனே எனக்கு தெரிந்து விட்டது இன்றைய நாள் விராட் கோலி உடையது என்று! விராட்டும் , டுபிளசிஸ்சும் இன்றைய ஆட்டத்தில் முழு கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள். இன்றைய ஆட்டத்தின் ஸ்பெஷலாட்டியே அவர்கள் பெரிய ஷாட் மட்டும் ஆட வில்லை.
இருவரும் ரன்களை அபாரமாக ஓடி எடுத்து இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வெற்றிகரமான ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கிறார்கள். விராட் கோலியும் டுப்ளசிசும் பார்க்கும்போது 186 ரன்கள் என்ற இலக்கு போதுமானதாக எப்போதுமே இருக்காது என்று சச்சின் பாராட்டியுள்ளார்.

இதுபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப், கிங் விராட் கோலி தன்னுடைய இயல்பான ஆட்டத்திற்கு வந்துவிட்டார்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இது போன்ற ஒரு சதத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று பாராட்டினார். நெருக்கடியான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் விராட் கோலியின் இந்த சதம் மிகவும் பாராட்டத்தக்கது என்றும் கெவின் பீட்டர்சன் கூறியிருக்கிறார்.