For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது.. மூத்த வீரரை கலாய்த்த சச்சின்.. செம வைரல் போட்டோ!

மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பந்தை எச்சில்படுத்த தடை விதித்துள்ளது ஐசிசி.

Recommended Video

Dravid beat Sachin Tendulkar in Wisden India online poll.

சச்சின் டெண்டுல்கர் இந்த விதியால் மூத்த பந்துவீச்சாளர் ஒருவர் இனி தன் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த பந்துவீச்சாளர் பந்துவீசும் முன் பந்தை முத்தமிடுவார். அவர் இனி பந்தை முத்தமிட முடியாது என புகைப்படம் போட்டு சுட்டிக் காட்டி கலாய்த்து இருக்கிறார்.

கிரிக்கெட் முடக்கம்

கிரிக்கெட் முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கி உள்ளது. எந்த கிரிக்கெட் தொடரும் நடக்காமல் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ஏங்கிப் போய் உள்ளனர். மீண்டும் கிரிக்கெட் தொடங்க பெரிய அணிகள் திட்டமிட்டு வருகின்றன.

மீண்டும் கிரிக்கெட்

மீண்டும் கிரிக்கெட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் இன்னும் இரு வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் ஐசிசி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே கிரிக்கெட் போட்டிகளை நடத்த கடும் விதிகளை அமல்படுத்தியது.

புதிய விதி

புதிய விதி

அதன் ஒரு பகுதியாக வீரர்கள் கிரிக்கெட் பந்தை எச்சில் படுத்தக் கூடாது என்ற விதி உருவாக்கப்பட்டது. அது வேகப் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சிக்கலை உண்டாக்கும் என கூறப்பட்டது. காரணம், பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய முடியாது.

வேறு ஒரு பிரச்சனை

வேறு ஒரு பிரச்சனை

இந்த நிலையில், லசித் மலிங்காவுக்கு பந்து ஸ்விங் ஆகாமல் போவது கூட பிரச்சனை இல்லை. மாறாக வேறு ஒரு பிரச்சனை உள்ளது. அவர் பந்துவீசும் முன் பந்தை முத்தம் கொடுத்து பின் ஓடி வந்து வீசுவார். தற்போதைய ஐசிசி விதிப்படி அவர் இனி அப்படி செய்ய முடியாது.

புகைப்படம்

புகைப்படம்

அதைப் பற்றி குறிப்பிட்ட சச்சின் டெண்டுல்கர், அவர் பந்தை முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அத்துடன், "புதிய ஐசிசி விதிகளின் படி குறிப்பிட்ட ஒருவர் தன் பந்துவீச்சை மாற்றிக் கொள்ள வேண்டும்.. என்ன சொல்கிறீர்கள் மலி?" என கூறி உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் நட்பு

மும்பை இந்தியன்ஸ் நட்பு

மலிங்கா இலங்கை வீரர் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் கேப்டன்சியில் ஆடி உள்ளார். தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறார் லசித் மலிங்கா. அந்த நட்பின் அடிப்படையில் சச்சின் இவ்வாறு கிண்டல் செய்துள்ளார்.

Story first published: Wednesday, June 24, 2020, 19:28 [IST]
Other articles published on Jun 24, 2020
English summary
Sachin Tendulkar made fun of Malinga’s kissing the ball before his run up routine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+