Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபாரமான ஆட்டம்- மும்பையை அரை இறுதிக்கு இட்டுச் சென்றார் டெண்டுல்கர்

Sachin Tendulkar
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்த சச்சின் டெண்டுல்கர், தனது அணியை அரை இறுதிக்கும் அழைத்துச் சென்று விட்டார்.

நேற்று ஜெய்ப்பூரில் மும்பைக்கும், ராஜஸ்தானுக்கும் இடையிலான விறுவிறுப்பான போட்டி நடந்தது. இதில் புத்தம் புதிதாக கிரிக்கெட் ஆட வந்த துடிப்பான இளம் வீரரைப் போல புகுந்து விளையாடினார் டெண்டுல்கர்.

அவரது புயல் வேக ஆட்டத்தால் ராஜஸ்தான் பவுலர்கள் சோர்ந்து போய் விட்டனர். அட்டகாசமாக ஆடி 59 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார் டெண்டுல்கர். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார்.

இதுதான் ஐபிஎல் போட்டிகளிலேயே அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். டெண்டுல்கரின் பேட்டிங் மற்றும் மும்பை அணியின் பந்து வீச்சு காரணமாக 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்த்து.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அரை இறுதிக்கு நுழைந்த முதல் அணி மும்பைதான்.

டெண்டுல்கர் நேற்று எடுத்த அரை சதம், இந்தத் தொடரில் அவர் போடும் ஐந்தாவது அரை சதமாகும். அதுதவிர 506 ரன்களையும் அவர் இந்தத் தொடரில் எடுத்து அதிக அளவில் ரன் குவித்த வீரராகவும் உருவெடுத்துள்ளார். இதுவரை அந்த இடத்தில் கல்லிஸ் இருந்து வந்தார். தற்போது அந்த இடத்தை டெண்டுல்கர் கைப்பற்றி விட்டார்.

சுருக்கமான ஸ்கோர்

மும்பை இந்தியன்ஸ் - 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள்.

டெண்டுல்கர் 89, டுமினி 31.

ராஜஸ்தான் ராயல்ஸ் - 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள்.

ஆடம் வோக்ஸ் 28, அபிஷேக் ஜூன்ஜூன்வாலா 22.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+