Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை 30 லட்சம் ருபாய் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

Recommended Video

Sachin Tendulkar Opens Up! MI-ல் Arjun-க்கு ஏன் Chance இல்ல? | Aanee's Appeal | #Cricket

ஆனால், இந்த சீசனிலும் மும்பை அணி பெஞ்சில் அமர்ந்து தான் அர்ஜூன் பொழுதை கழித்தாரே தவிர அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த சீசனையும் சேர்த்தால் மொத்தம் 28 போட்டியில் வாய்ப்பு கொடுக்காமல் ரோகித் சர்மா ஏமாற்றியுள்ளார்.

மும்பை அணி தேர்வு

மும்பை அணி தேர்வு

22 வயதான அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை அணிக்காக இதுவரை 2 டி20 போட்டியில் விளையாடி இருக்கிறார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு தரப்படவில்லை. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின், மும்பை அணியின் தேர்வில் நான் என்றுமே தலையிட்டது இல்லை. அனைத்தையும் அணி நிர்வாகம் தான் பார்த்து கொள்ளும்.

சச்சின் அறிவுரை

சச்சின் அறிவுரை

மும்பை அணியின் மெண்டராக நான் எப்போதும் இப்படி தான் செயல்படுகிறேன். அர்ஜூன் டெண்டுல்கருக்கு நான் கூறி கொள்வது எல்லாம் ஒன்று தான். கிரிக்கெட் மீது காதலும், பற்றும் இருப்பதனால் தான் நீ கிரிக்கெட்டை தேர்ந்து எடுத்தாய். இந்த பாதை கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.

நிச்சயமாக கிடைக்கும்

நிச்சயமாக கிடைக்கும்

கடினமாக தான் இருக்கும். ஆனால் நீ செய்வதை தொடர்ந்து செய். இன்னும் உழைத்து திறமையை வளர்த்து கொள்ள, நீ எதிர்பார்க்கும் முடிவு கண்டிப்பாக உனக்கு கிடைக்கும் என்று அறிவுரை கூறியதாக சச்சின் கூறினார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் அர்ஜூன் டெண்டுல்கர், பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்டார்.

ரசிகர்களை கவர்ந்த அர்ஜூன்

ரசிகர்களை கவர்ந்த அர்ஜூன்

பயிற்சியில் கூட இஷான் கிஷனுக்கு யாக்கர் பந்துவீசி கிளின் போல்ட் ஆக்கினார். இதனால் சச்சின் மகனால் தான் மும்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது என்று கூறிய ரசிகர்களே, அர்ஜூன் டெண்டுல்கருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் ரோகித் சர்மா என்ன காரணத்தினாலோ கடைசி வரை அவருக்கு வாய்ப்பு தரவில்லை.

Story first published: Wednesday, May 25, 2022, 13:52 [IST]
Other articles published on May 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+