ரசிகரின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த ரோகித் சர்மா
மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ரோகித் சர்மா, இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் சச்சின் டெண்டுல்கர் அல்லது வீரேந்திர சேவாக் இருவருரில் ரோகித்திற்கு பிடித்தவர் குறித்து கேள்வி எழுப்பினார்.
எப்போதுமே நகைச்சுவை உணர்வு கொண்ட இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்த கேள்விக்கும் நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

3 முறை இரட்டைசதம்
முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் இருவருடனும் விளையாடியுள்ளவர் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. இரு வீரர்களுடனும் சிறப்பான புரிதல் கொண்டவர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் மற்றும் சேவாக்கை தொடர்ந்து இரட்டை சதம் அடித்தவர் ரோகித் சர்மா. இந்த சாதனையை மூன்று முறை அவர் தொடர்ந்துள்ளார்.

ரோகித்தின் ரசிகர்
தன்னுடைய சாதனைகளை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முறியடிப்பார்கள் என்று முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார். இதேபோல ரோகித்தின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் திறமைகளுக்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்று சேவாக்கும் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தடுத்த சதங்கள்
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட ரோகித் சர்மா உடனடியாக தன்னுடைய திறமையை புலப்படுத்தினார். அந்த தொடரில் அடுத்தடுத்து சதங்களை அடித்து அனைவரையும் புருவங்களை உயர்த்த வைத்து துவக்க ஆட்டக்காரராக அணியில் நிரந்தர இடம்பிடித்துள்ளார்.

ரோகித் சர்மா பதில்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் லைச் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சச்சின் டெண்டுல்கரா அல்லது வீரேந்திர சேவாக்கா யார் சிறப்பானவர் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நகைச்சுவையுடன் ரோகித் சர்மா, ஏங்க கொல்றீங்க... என்னும்படியாக பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications