கோஹ்லி ஆட்டம் எப்படி? மனம் திறந்த சச்சின்
மும்பை: விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரிடம் தனக்கு பிடித்த விஷயம் எது என்பது பற்றியும் மனம் திறந்துள்ளார் சச்சின்.
விராட் கோஹ்லி தனது வாழ்க்கையின் உச்சகட்ட ஃபார்மில் உள்ளார். 1998ம் ஆண்டில் சச்சின் இருந்த உச்சகட்ட ஃபார்மை, 2016ல் கோஹ்லியின் செயல்பாட்டோடு ஒப்பிடுகிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
1998 காலகட்டத்தில் சார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசி, இந்திய அணியை கோப்பையை வெல்ல செய்தவர் சச்சின். அந்த ஆட்டம் இதுவரை சச்சின் கிரிக்கெட் சகாப்தத்தின் மகுடத்தில் வைக்கப்பட்ட மாணிக்க கல்லாக வர்ணிக்கப்படுகிறது.

சச்சின்-கோஹ்லி
கோஹ்லியும் இப்போது அதே போன்ற ஆக்ரோஷ ஆட்த்தை வெளிப்படுத்தி வருவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் ஒப்பிடுகிறார்கள். அதேநேரம், சச்சினுடன் தன்னை ஒப்பிடுவது தர்ம சங்கடமாக இருப்தாக கோஹ்லி நெளிகிறார்.

கோஹ்லி மறுப்பு
களத்தில் கோஹ்லியாகவே ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதாகவும், சச்சினை மனதில் நிறுத்தி ஆடுவது தனது இயல்பான ஆட்டத்தை பாதித்துவிடும் என்றும் கோஹ்லி கூறியிருந்தார்.

மனம் திறந்த சச்சின்
இந்நிலையில், கல்ஃப் நியூஸ் என்ற ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள சச்சின், கோஹ்லி குறித்து மனம் திறந்துள்ளார். அவரது ஆட்டத்திறமை குறித்து வர்ணித்துள்ளார்.

நல்ல ஷாட்டுகள்
சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளதாவது: கோஹ்லி ஸ்ட்ரெயிட் பேட் முறையில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஏனோ தானோவென்று அடிக்காமல் நுணுக்கமான ஷாட்டுகள் மூலம் கோஹ்லி ரன் குவித்து வருகிறார்.

ஈடுபாடு உள்ளவர்
கோஹ்லியிடம் ஸ்பெஷல் திறமை உள்ளதை மறுக்க முடியாது. தனது ஆட்டத்திறமையை வலர்க்க கோஹ்லி நிறையவே முயற்சிகள் செய்துவருகிறார். ஆட்டத்தின் மீதான அவரது ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது.

மன பலம்
பல்வேறு வகையான ஆட்டங்களிலும் அவர் ரன் குவிப்பை தொடருகிறார். ஆனால் தனது பேட்டிங் டெக்னிக்கை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். முக்கியமாக, கோஹ்லி, மனதளவில் மிகவும் பலமானவர். நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக ஆடுகிறார். இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications