Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டனில் சச்சின், கூடவே கோஹ்லியும், அனுஷ்காவும்... நல்லவேளை மரியா இந்த தடவை உளறலை!

விம்பிள்டன்: சச்சினா ,அது யார் என்று கேட்டு கடந்த காலத்தில் மரியா ஷரபோவா அதிர வைத்தது போல இந்த முறை விம்பிள்டனில் எதுவும் நடக்கவில்லை.

சச்சின் டெண்டுல்கர் ஒரு விம்பிள்டன் பிரியர். வருடா வருடம் எப்படியாவது போட்டியைப் பார்க்க வந்து விடுவார். இந்த முறையும் விம்பிள்டனுக்கு தனது மனைவி அஞ்சலியுடன் வந்திருந்தார் சச்சின்.

அவருடன், விராத் கோஹ்லியும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் கூட போட்டியைப் பார்க்க வந்திருந்தனர். நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசித்தனர். சச்சின் இரு அரை இறுதிப் போட்டிகளைப் பார்த்து ரசித்தார்.

விம்பிள்டனில் சச்சின்

விம்பிள்டனில் சச்சின்

கடந்த காலத்தைப் போலவே இந்த முறையும் சச்சின் டெண்டுல்கர், விம்பிள்டனுக்கு வந்திருந்தார். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் மிகுந்த ரிலாக்ஸ்டாக காணப்பட்டார் சச்சின். அவருடன் மனைவி அஞ்சலியும் வந்திரு்நதார்.

கூடவே கோஹ்லி - அனுஷ்கா

கூடவே கோஹ்லி - அனுஷ்கா

அவர்களுடன் விராத் கோஹ்லி, அனுஷ்கா சர்மாவும் வந்திருந்தார். சச்சின், கோஹ்லிக்கு நடுவில் அஞ்சலி அமர்ந்திருந்தார். கோஹ்லிக்கு அடுத்து அனுஷ்கா உட்கார்ந்திருந்தார்.

அரை இறுதிப் போட்டிகள்

அரை இறுதிப் போட்டிகள்

சச்சினும், அஞ்சலியும் இரு அரை இறுதிப் போட்டிகளையும் ரசித்துப் பார்த்தனர். ஆண்டி முர்ரே - பெடரர் மற்றும் ஜோகோவிக் - ரிச்சர்ட் காஸ்கட் ஆகியோருக்கு இடையே நடந்த அரை இறுதிப் போட்டிகளை சச்சின் ரசித்துப் பார்த்தார்.

நண்பேண்டா பெடரர்

நண்பேண்டா பெடரர்

சச்சினும், பெடரரும் நல்ல நட்பில் உள்ளவர்கள். எனவே பெடரர் மோதிய போட்டியை அவர் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்.

தியரி ஹென்றி

தியரி ஹென்றி

ஓய்வு பெற்ற பிரெஞ்சு கால்பந்து ஜாம்பவான் தியரி ஹென்றியும் கூட ரிச்சர்ட் - ஜோகோவிக் போட்டியைப் பார்க்க வந்திருந்தார். அதேபோல மேலும் பல பிரபலங்களையும் ராயல் பாக்ஸ் காலரியில் பார்க்க முடிந்தது.

ஷரபோவா எதுவும் பேசலைப்பா

ஷரபோவா எதுவும் பேசலைப்பா

முன்பு ஒருமுறை சச்சினை யார் என்றே தெரியாது என்று ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா கூறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அவரது பேஸ்புக்கை நம்மவர்கள் கமெண்ட் போட்டு நாறடித்து விட்டனர். அந்த மாதிரி இந்த முறை எதுவு்ம் நடக்கவில்லை.

Story first published: Monday, July 13, 2015, 13:49 [IST]
Other articles published on Jul 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+