ஐசிசி உலகக் கோப்பை அணியில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜாகிர் கான்

போட்டியின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங். அதிக ரன் எடுத்த 2வது வீரர் சச்சின். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் ஜாகிர்கான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கை வீரர்கள்தான் அதிக இடங்களை இந்த லெவன் அணியில் பிடித்துள்ளனர். இந்த இரு நாடுகளிலிருந்தும் 7 வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இதில் நால்வர் இலங்கை வீரர்கள், மற்ற மூவரும் இந்திய அணியினர். மொத்தம் 6 நாடுகளைச் சேர்ந்த அணியினர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி பொது மேலாளரும், முன்னாள் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்சன், விளையாட்டு ஆசிரியர் ஆனந்த் வாசு, ஐசிசி நடுவர் அலீம் தர், ஐசிசி போட்டி நடுவர் ரஞ்சன் மதுகல்லே, பத்திரிக்கையாளர் கிறிஸ்டோபர் மார்ட்டின் ஜென்கின்ஸ் ஆகியோர் அடங்கிய குழு இந்த 12 பேரையும் தேர்வு செய்தது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லெவன் அணி விவரம்:
சச்சின் டெண்டுல்கர், திலகரத்னே தில்ஷன் (இலங்கை), குமார சங்கக்காரா (இலங்கை-விக்கெட்கீ்ப்பர்-கேப்டன்), மஹளா ஜெயவர்த்தனே (இலங்கை), ஏப் டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), யுவராஜ் சிங், ஷான் வாட்சன் (ஆஸ்திரேலியா), ஷாஹித் அப்ரிதி (பாகிஸ்தான்), டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா), ஜாகிர் கான், முத்தையா முரளிதரன் (இலங்கை).
12வது ஆட்டக்காரர் - டிம் செளதி (நியூசிலாந்து)
Story first published: Thursday, June 7, 2012, 11:21 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications