Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினோடு சண்டை போட்டவர்.. இப்படி ஒரு வீரரை வைத்துக்கொண்டா சிஎஸ்கே திணறியது.. பரபரப்பு சம்பவம்

சென்னை: சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக அணிக்காக ஆடி வரும் சாய் கிஷோர் மிகவும் பவுலிங் செய்து வருகிறார்.

சையது முஷ்டாக் கோப்பை தொடரின் செமி பைனல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் தொடக்கத்தில் திணறிய தமிழ்நாடு அணி அதன்பின் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.

அதிலும் தமிழக அணியின் பவுலிங் இன்றைய ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மிகவும் சிறப்பாக இருந்தது.

 எப்படி

எப்படி

சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக அணிக்காக ஆடி வரும் சாய் கிஷோர் மிகவும் பவுலிங் செய்து வருகிறார். 2016ல் இருந்து முதல் தர போட்டிகளில் கவனம் ஈர்த்த சாய் கிஷோர் தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக ஆடி வருகிறார். இந்த வருடம் இவரின் ஆட்டம் கவனம் ஈர்த்துள்ளது.

டிஎன்பிஎல்

டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் தொடரில்தான் இவர் கவனம் பெற்றார். முதல் டிஎன்பிஎல் தொடரிலேயே இவர் 12 விக்கெட் எடுத்தார். சேப்பாக் கில்லீஸ் அணிக்காக டிஎன்பிஎல் அணியில் ஆடி வரும் சாய் கிஷோர் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார்.

சிறப்பான வீரர்

சிறப்பான வீரர்

அதிலும் இவரின் லெப்ட் ஹேண்ட் ஸ்பின் பவுலிங் தமிழக அணிக்கு இந்த சீசனில் பெரிய அளவில் உதவியது. இன்று ராஜஸ்தானுக்கு எதிரான செமி பைனல் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் இரண்டு விக்கெட் எடுத்தார். மற்ற பவுலர்கள் விக்கெட் எடுக்க தவறிய போது சாய் கிஷோர் சிறப்பாக விக்கெட் எடுத்தார்.

பேட்டிங்

பேட்டிங்

சிறப்பாக பேட்டிங் செய்து வந்த அசோக் மேனேரியா, பாரத் சர்மா இரண்டு பேரையும் சாய் கிஷோர்தான் விக்கெட் எடுத்தார். முதல் டிஎன்பிஎல் தொடரில் மூத்த வீரர் அஸ்வினுடன் களத்தில் இவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார். அந்த சண்டை பெரிய அளவில் சர்ச்சையானது.

ஸ்பின் பவுலிங்

ஸ்பின் பவுலிங்

நன்றாக ஸ்பின் பவுலிங் செய்யும் இவர் சிஎஸ்கேவில் இருக்கிறார். ஆனால் அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அணியில் இருக்கும் பியூஸ் சாவ்லா போன்ற ஸ்பின் பவுலர்கள் சொதப்பும் போது கூட சாய் கிஷோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

 மேட்ச் வின்னர்

மேட்ச் வின்னர்

தற்போது தமிழக அணிக்கு மேட்ச் வின்னராக சாய் கிஷோர் உருவெடுத்துள்ளார். இதனால் வரும் ஐபிஎல் சீசனில் சாய் கிஷோர் சிஎஸ்கே அணிக்கு ஆட வாய்ப்புள்ளது. தோனி இவரை களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, January 29, 2021, 17:10 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+