Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மனுஷன்யா..சாஹா கூறிய ஒற்றை வார்த்தை..நெகிழ்ச்சியில் புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

பாகிஸ்தான்: ரிஷப் பண்ட் உடனான போட்டி குறித்து சாஹா கூறிய வார்த்தைகள் பாகிஸ்தான் முன்னாள் வீரரை நெகிழச் செய்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதற்காக வரும் ஜூன் 2ம் தேதி முதல் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்த தொடரில் விக்கெட் கீப்பிங் துறையில் ரிஷப் பண்ட் மற்றும் சாஹா இடையே போட்டி நிலவிய நிலையில் பண்ட்-க்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என சாஹா கூறினார்.

விக்கெட் கீப்பிங் இடம்

விக்கெட் கீப்பிங் இடம்

இந்திய டெஸ்ட் அணியில் தோனி சென்ற பிறகு விருதிமான் சாஹா தான் விக்கெட் கீப்பிங்கிற்கு முதல் தேர்வாக இருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் ஆந்த இடத்த ரிஷப் பண்ட் இருக்கமாக பிடித்துக்கொண்டார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் சாஹா தான் கீப்பிங் செய்தார். ஆனால் அவர் பேட்டிங்கில் சொதப்பியதால் அதற்கு அடுத்த போட்டியில் இருந்து ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு போனது. அதனை பக்காவாக பயன்படுத்திக்கொண்ட ரிஷப் பண்ட் இன்று வரை இந்திய அணியின் முதல் தேர்வாக உள்ளார்.

 சஹா கருத்து

சஹா கருத்து

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாஹா மற்றும் பண்ட் இருவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய சாஹா, ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபில் சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். நல்ல ஃபார்மில் உள்ளார். எனவே அவர் தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விக்கெட் கீப்பருக்கு முதல் தேர்வாக இருப்பார். நான் எனக்கான வாய்ப்புகாக காத்திருப்பேன். அப்படி ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அந்த ஒரு வாய்ப்புகாக தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

புகழாரம்

புகழாரம்

இந்நிலையில் சாஹாவின் கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சக வீரர் தான் சிறப்பாக ஆடுகிறார். அவருக்குதான் வாய்ப்பு எனக்கூறுவதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. தொழிலுக்கு நேர்மையானவரால் மட்டும்தான் இப்படி கூற முடியும். சாஹாவை பாராட்டியே ஆகவேண்டும். ஐபிஎல் முதல் சீசனில் நானும், சாஹாவும் கொல்கத்தா அணிக்காக சேர்ந்து விளையாடியுள்ளோம். அவர் மிகவும் நேர்மையான மனிதர். மிகவும் எளிமையானவர் எனக்கூறியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

பிசிசிஐ-ன் விதிமுறைகள் மற்றும் தேர்வு முறைகள் வீரர்களுக்கு வாய்ப்பில்லை என்ற அச்சத்தை எப்போதும் கொடுக்காது. வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது குறித்து எந்த பயமும் இல்லை என்றால் அணியின் நலன் குறித்து மட்டுமே யோசிப்பார்கள். சாஹா அணியில் இருக்கும்போது, மற்றொருவர் தான் சிறப்பாக ஆடுவார், அவர் தான் விளையாட வேண்டும் என நினைப்பது என்பதெல்லாம் பிசிசிஐ-ன் விதிமுறைகளுக்கு வெற்றி ஆகும்.

Story first published: Saturday, May 22, 2021, 20:34 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+