Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-க்கு அந்த இடம் மட்டும் வேணாம்.. பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறிய அட்வைஸ்..சிந்திக்குமா பிசிசிஐ

பாகிஸ்தான்: ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் ஐடியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. ஏனென்றால் மீதமுள்ள போட்டிகளை நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29ம் லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 31 போட்டிகள் தடைபட்டுள்ளன.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

இந்திய அணிக்கு செப்.14ம் தேதி வரை டெஸ்ட் தொடர் உள்ளது. அதே போல் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடங்கிவிடும். எனவே டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பரிலேயே ஐபிஎல் தொடரை நடத்தி முடித்துவிட வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி தொடரை எங்கு நடத்தலாம் என்ற கேள்வி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2 வாய்ப்புகள்

2 வாய்ப்புகள்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் அயல்நாட்டில் தான் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.

முதல் தேர்வு

முதல் தேர்வு

இந்நிலையில் இதற்கு பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அட்வைஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முதலில் இந்தியாவுக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் என்னைப்பொறுத்தவரை ஐபிஎல் தொடர்களை நடத்தி முடிக்க ஐக்கிய அரபு அமீரகம் சிறந்த தேர்வாக இருக்கும். அது சிறப்பான தேர்வு என்பதை பிசிசிஐ அறியும்.

இங்கிலாந்தில் பிரச்னை

இங்கிலாந்தில் பிரச்னை

ஐக்கிய அரபு அமீரகம் அருகாமையில் உள்ளது. அனைத்து வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தைரியமாக வருவார்கள். இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷி, உள்நாட்டு தொடர் என ஏற்கனவே பல போட்டிகள் உள்ளன. இதனால் பிட்ச்சானது அதிக பயன்பாட்டால் சேதமடைந்திருக்கும். ஐபிஎல் போன்ற டி20 போட்டிக்கு சிக்கலை தரும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 22, 2021, 20:35 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+