Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு யாரும் ஆதரவாக இல்லை.. ஏன் உழைக்கிறோம் என தோன்றுகிறது.. சர்ஃபராஸ் கான் வேதனை

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் மனம் திறந்து பேசியுள்ளார். தனக்குத் தனது தந்தையைத் தவிர வேறு யாருடைய ஆதரவும் இல்லை என்றும், தினமும் காலையில் விழித்து மீண்டும் உழைப்பதற்குத் தமக்கு போராட்டமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வரும் சர்பராஸ் கான், அளித்த பேட்டியில் தனது மனவருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். "ஒவ்வொரு நாள் காலையிலும் விழிக்கும் போது, 'நான் ஏன் மீண்டும் மீண்டும் கடினமாக உழைக்க வேண்டும்? அதே சூழலை ஏன் மீண்டும் சந்திக்க வேண்டும்?' என்று எனக்கே கேள்வி கேட்டுக்கொள்கிறேன்.

Sarfaraz Khan

ஆனால், எனது தந்தை நௌஷாத் எனக்காக கடுமையாக உழைப்பதை பார்க்கும்போது, அவருக்காக ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அது மட்டுமே இப்போது என்னை ஊக்குவிக்கும் ஒரே காரணமாக உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

ரஞ்சி கோப்பை: ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷ் துபே அபாரம்

ரஞ்சி கோப்பை: ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷ் துபே அபாரம்

"என் வாழ்க்கையில் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு ஆதரவு இருக்கிறது என்றால் அது என் தந்தையிடம் இருந்து மட்டுமே. ஆனால் பரவாயில்லை, நான் கடுமையாக உழைத்துள்ளேன். என் தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன். இந்த தலைமுறையில் இந்திய அணியில் இடம் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. ஒன்று அல்லது இரண்டு முறை ரன் அடித்து நான் இந்திய அணிக்கு வரவில்லை. 300, 200, 250 ரன்களைக் குவித்துதான் வந்தேன். என்னால் முடிந்தவரை தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுச் சூழல்களில் விளையாடும் அளவுக்குத் தன்னிடம் தொழில்நுட்பம் இல்லை என்ற விமர்சனத்தையும் சர்பராஸ் கான் மறுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் 61 பந்துகளில் சதம் அடித்ததையும், அணிக்குள் நடந்த பயிற்சிப் போட்டியில் 76 பந்துகளில் 101 ரன்கள் எடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 நவம்பரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்ற போதிலும், அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பிறகு அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். சமீபத்தில் இலங்கைத் தொடரின் போது காயமடைந்த வீரருக்கு மாற்றாகச் சேர்க்கப்பட்ட போதிலும், பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய சூழல்களில் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

IND vs NZ: ரிஷப் பண்ட் உடல்தகுதி தேர்வில் தோல்வி.. டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? அடுத்தது என்ன?

Also Read

IND vs NZ: ரிஷப் பண்ட் உடல்தகுதி தேர்வில் தோல்வி.. டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? அடுத்தது என்ன?

தேர்வாளர்களின் தொடர்புகொள்வது குறித்துக் கேட்கப்பட்டபோது, முடிவெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டதாகச் சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக இருந்தாலும் சரி அல்லது மும்பை அணிக்காக இருந்தாலும் சரி, களமிறங்கி ரன்களைக் குவிப்பதே தனது பணி என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

Story first published: Monday, November 2, 2026, 20:05 [IST]
Other articles published on Nov 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+