Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேவாக், கம்பீர், யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.. அதுதான் வாழ்க்கை.. ரோகித் சர்மா பேட்டி!

சென்னை: சேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு, தனக்கு சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் மிகமுக்கிய வீரராக இருந்தவர் ரோகித் சர்மா. ஆனால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்து இரு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, இம்முறை கேப்டனாக இந்திய வீரர்களை வழிநடத்தவுள்ளார். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா, இம்முறை இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Sehwag, Gmabhir and Yuvraj Singh didnt had a chance to Lead India says Rohit Sharma ahead of World Cup 2023

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்தும், கேப்டன்சி குறித்தும் ரோகித் சர்மா பேசுகையில், கேப்டன்சி என்பது ஒரு கிரிக்கெட் வீரரின் உச்சத்தில் இருக்கும் போது வழங்கப்பட வேண்டும். ஒரு கிரிக்கெட் 27 அல்லது 28 வயதில் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார். ஆனால் நாம் நினைத்ததெல்லாம் உடனடியாக நடக்காது. கேப்டன்சி பற்றி பேசும் போது, ஜாம்பவான் வீரர்கள் பலருக்கும் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் எனக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதே சரியானது. ஏனென்றால் எனக்கு முன் கேப்டன்சி செய்தது தோனியும், விராட் கோலியும் தான். அவர்கள் இருவரும் சாதாரண வீரர்கள் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். அதேபோல் கவுதம் கம்பீர், சேவாக் உள்ளிட்டோருக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பே கிடைக்கவில்லை. யுவராஜ் சிங்கை நினைத்து பாருங்கள். அவர் ஒருமுறை கூட இந்திய அணியை வழிநடத்தியதில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்கிற்கு செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது கடைசி வரை கிடைக்கவில்லை. அதுதான் வாழ்க்கை. எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. அதற்காக பெருமை கொள்கிறேன். அதேபோல் எப்படி அணியை வழிநடத்த வேண்டும் என்பது நன்றாக தெரிய வந்த பின், எனக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டது. கேப்டன்சி பற்றி ஏபிசிடி கூட தெரியாமல் இருந்த நேரத்திற்கு பதில் இப்போது வழங்கப்பட்டதே சரியானது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, October 4, 2023, 15:16 [IST]
Other articles published on Oct 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+