Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உடனே ஜெய்ப்பூருக்கு வாங்க.. இளம் தமிழக வீரருக்கு போன் போட்டு கூப்பிட்ட ராஜஸ்தான் அணி.. செம டிவிஸ்ட்!

சென்னை: 2021 சையது முஷ்டாக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய தமிழக வீரர் ஷாருக்குக்கானை ராஜஸ்தான் அணி நிறுவனம் அழைத்து இருக்கிறது.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக ஆடி வரும் ஷாருக்கான் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். 2021 ஐபிஎல் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை கவனம் பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. இந்த தொடர் முழுக்க தமிழக வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள்.

சிறப்பு

சிறப்பு

அதிலும் தமிழக வீரர் ஷாருக்கான் இந்த தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். கடைசி வரை அதிரடியாக ஆடி மேட்சை பினிஷ் செய்வது இவரின் சிறப்பம்சமாக இருக்கிறது. அதிலும் நாக் அவுட் போட்டிகளில் தமிழக அணிக்காகக் ஷாருக்கான் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது.

எப்படி ஆடினார்

எப்படி ஆடினார்

ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடி இவர் வெற்றி தேடி தந்துள்ளார். காலிறுதி போட்டியில் இவர் வெறும் 19 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். இறுதிப்போட்டியில் இவர் அதிரடியாக ஆடி பினிஷ் செய்தார்.

பவர் ஹிட்டர்

பவர் ஹிட்டர்

மிகப்பெரிய பவர் ஹிட்டராக இவர் களத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை போன் செய்து ஜெய்ப்பூர் வர சொல்லி இருக்கிறது. இவரின் பேட்டிங்கை சோதனை செய்ய ராஜஸ்தான் அணி அழைத்துள்ளது.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

இவரை அணியில் எடுக்கும் விதமாக இவருக்கு டெஸ்டிங் நடத்த ராஜஸ்தான் முடிவு செய்துள்ளது. இவர் சிறப்பம்சமே சஞ்சு சாம்சன் போல முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டுவது. இதனால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு தற்போது ஷாருக்கானை பார்த்து பிடித்து போய் அழைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பு

சிறப்பு

தமிழக வீரர்கள் பலர் இந்த தொடர் முழுக்க சிறப்பாக ஆடினார்கள். இந்த நிலையில் தற்போது முதல் வீரர் ஐபிஎல் ஒன்றால் அழைக்கப்பட்டு இருக்கிறார். இன்னும் பலர் இதேபோல் அழைக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள.

Story first published: Wednesday, February 3, 2021, 9:40 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+