IPLல் ஒரு மகாபாரதம்.. 94 ரன்கள் விளாசிய சுப்மன் கில்.. 19 பந்துகளில் சாஹா அரைசதம்.. GT இமாலய இலக்கு
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று ஒரு மகாபாரதம் நடைபெற்று வருகிறது. அண்ணனும், தம்பியும் வெவ்வேறு அணிக்கு தலைமை தாங்கி போட்டியில் இன்று விளையாடினர். டாஸ் வென்ற அண்ணன் க்ருனால் பாண்டியாவின் லக்னோ அணி பந்துவீசுவதாக கூறினார்.
இதனையடுத்து, பேட்டிங் செய்த குஜராத் அணி வீரர்கள், லக்னோ பந்தை சிதறடித்தனர். சாஹாவும், சுப்மன் கில்லும் போட்டி போட்டு ரன்களை குவித்தனர். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 4 ஓவர் முடிவில் எல்லாம் குஜராத் அணி 50 ரன்களை எடுத்தது.

20 பந்தில் சாஹா அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் 29 பந்துகளை எதிர்கொண்டு சுப்மன் கில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ வீரர்கள் தடுமாறினர். தொடர்ந்து அதிரடி காட்டிய சாஹா 43 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்களை குவித்தது. இறுதியில் ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 15 பந்துகளில் 25 ரன்களும், டேவிட் மில்லர் 12 பந்துக்கு 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஒரு முனையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற சுப்மன் கில் 51 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார். இதில் 7 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும் இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குஜராத் அணி தங்களது அதிகபட்சமாக 20 ஓவர் முடிவில் 227 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


Click it and Unblock the Notifications