Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதுவும் ஈஸியாக அமையல.. என்னையே நான் கட்டுப்படுத்தி கொண்டேன்..ஆட்டநாயகன் வென்ற சுப்மன் கில் பேட்டி

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 51 பந்துகளில் 94 ரன்கள் அடித்தார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.

இதன் மூலம் குஜராத் அணி 227 என்ற இலக்கை எட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

shubman gill reveals he is still learning to score runs

இது குறித்து பேசிய அவர் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் ஒன்றும் ஈசியாக எல்லாம் வெற்றி பெறவில்லை. ஏனென்றால் லக்னோ அணி வீரர்களும் பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் மோகித் மற்றும் முகமது சமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி லக்னோ வீரர்களை கட்டுப்படுத்தினர்.

சாகா உண்மையிலே சிறந்த வீரர். அவருடன் பேட்டிங் செய்த போது நிறைய விஷயம் கற்றுக் கொண்டிருக்கிறேன். எங்களுக்குள்ளே ஒரு நல்ல உறவு இருக்கிறது. ஐபிஎல் முதல் சீசனில் இருந்து தற்போது வரை அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உடல் தகுதியை பார்த்துக் கொள்வதிலும் சக அணி வீரர்களிடம் நடந்து கொள்வதிலும் சாகாவிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டத்தில் எனக்கான வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எதிரே சாஹா, அதிரடியாக விளையாடுகிறார் என்று நானும் உணர்ச்சிவசப்பட்டு ரன்களை சேர்க்கவில்லை. என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். கடைசியாக விளையாடிய இரண்டு ஆட்டத்தில் நான் சிக்ஸரை அடிக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் கூட 17 வது ஓவர் வரை நான் பவுண்டரி அடிக்க வில்லை. என்னுடைய பேட்டிங்கில் எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நுணுக்கங்கள் குறித்து இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் வருகிறேன் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, May 7, 2023, 22:51 [IST]
Other articles published on May 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+