Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் தலையில் AI கருவி.. இந்திய கேப்டனை வைத்தே சோதனை செய்கிறார்களா? உண்மை என்ன?

ஆக்லாந்து: நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில்லின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலைப்பயிற்சியில் ஈடுபட்ட சுப்மன் கில், தனது நெற்றியில் விசித்திரமான ஏஐ கருவி ஒன்றை அணிந்திருந்தார். அதனால் இந்திய கேப்டனை வைத்து ஏதேனும் ரகசிய சோதனை செய்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது இந்த காட்சி பதிவானது. இந்திய தொழிலதிபர் தீபிந்தர் கோயல் உருவாக்கிய ஏஐ கருவிதான் அது. இன்னும் சந்தைக்கு வராத டெம்பிள் என்ற அந்த அதிநவீன ஏஐ கருவியைதான் சுப்மன் கில் தலையில் அணிந்து இருந்தார். இதற்கு முன்பு பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்துவும் இந்த கருவியை அணிந்து களமிறங்கியிருந்தார். நெற்றியின் பக்கவாட்டு பகுதியில் அணியப்படும் இந்த கருவி, மூளையின் ரத்த ஓட்டம், நரம்பு மண்டலத்தின் எதிர்வினைகள் மற்றும் தீவிர பயிற்சியின் போது ஏற்படும் மன அழுத்தத்தின் அளவை துல்லியமாக கணக்கிடுகிறது.

Shubman Gill Tests Unreleased AI Headgear Temple During Auckland Net Session

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா ஏற்கனவே 3-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நவம்பர் 4 அன்று தொடங்க உள்ள ஒருநாள் தொடருக்காக தயாராகும் நோக்கில் கில் ஆக்லாந்து வலைப்பயிற்சியில் இணைந்தார். பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் கேஎல் ராகுல், இஷான் கிஷனுடன் இணைந்து வலைப் பயிற்சியில் இறங்கிய சுப்மன் கில், தனது கவனம் மற்றும் மன அழுத்தத்தைக் கண்காணிக்கவே இந்த நவீன ஏஐ கருவியை அணிந்து சோதித்துப் பார்த்தார்.

மும்பை இந்தியன்ஸில் இருந்து லசித் மலிங்கா நீக்கம்.. ஐபிஎல் தொடருக்கு முன் 3 பயிற்சியாளர்கள் அவுட்

மும்பை இந்தியன்ஸில் இருந்து லசித் மலிங்கா நீக்கம்.. ஐபிஎல் தொடருக்கு முன் 3 பயிற்சியாளர்கள் அவுட்

அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், இந்திய அணி இப்போதிருந்தே முழு வீச்சில் தயாராகி வருகிறது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே ஆக்லாந்து வந்தடைந்து விட்டார். விராட் கோலியும் விரைவில் அணியுடன் இணைய உள்ளார். தொடர் பயணங்களால் ஏற்படும் உடல் சோர்வையும், போட்டியின் போது ஏற்படும் கவனச் சிதறலையும் கட்டுப்படுத்தவே கில் இந்த நவீன ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், ஏன் இன்னும் சந்தைக்கு வராத ஒரு கருவியை சுப்மன் கில் அணிய வேண்டும்? அவரை வைத்து சோதனை செய்கிறார்களா அல்லது இது விளம்பர உத்தியா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Also Read

"வைபவ் சூர்யவன்ஷி பெஞ்ச்சில் உட்கார்ந்துதான் ஆகணும்.. ஏனென்றால்..".. கம்பீர் பிளானை சொன்ன அஸ்வின்
Story first published: Thursday, October 29, 2026, 17:24 [IST]
Other articles published on Oct 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+