For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ ஆம் சாரி.. சச்சினை விட இவர் தான் பெஸ்ட்.. ஏன்னா அந்த பலவீனம் இவர்கிட்ட இல்லை - சைமன் டவுல் !

மும்பை : முன்னாள் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் சைமன் டவுல் , சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மா தான் சிறந்த துவக்க வீரர் என புள்ளிவிவரத்துடன் கூறி உள்ளார்.

Recommended Video

Simon doul says Rohit is better than Sachin

இருவரது பேட்டிங் சராசரியையும் ஒப்பிட்டு, ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் சச்சினை விட சிறப்பாக ஆடி இருப்பதாக கூறி உள்ளார் அவர்.

மேலும், 90 ரன்கள் அடித்த பின் ரோஹித் சர்மா அதில் சிக்கிக் கொள்ள மாட்டார். அந்த பலவீனம் அவரிடம் இல்லை என கூறி உள்ளார்.

 அதெல்லாம் ஜெயிச்சுட்டு வந்து பேசணும்.. கேப்டன் கோலியின் சர்ச்சை பேச்சு.. முன்னாள் வீரர் விளாசல்! அதெல்லாம் ஜெயிச்சுட்டு வந்து பேசணும்.. கேப்டன் கோலியின் சர்ச்சை பேச்சு.. முன்னாள் வீரர் விளாசல்!

உலகின் சிறந்த துவக்க வீரர்

உலகின் சிறந்த துவக்க வீரர்

2013ஆம் ஆண்டு தான் ரோஹித் சர்மா முதன் முதலாக இந்திய ஒருநாள் அணியில் துவக்க வீரராக களமிறங்கினார். அப்போது முதல் தான் அவரது கிரிக்கெட் வாழ்வு ஏற்றத்தை சந்தித்தது. உலகின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக மாறினார் ரோஹித் சர்மா.

இரட்டை சதங்கள்

இரட்டை சதங்கள்

மூன்று இரட்டை சதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் வேறு எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார் ரோஹித் சர்மா. 2014ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்தார். அந்த சாதனையை இன்று வரை யாராலும் தொட முடியவில்லை.

உலகக்கோப்பை தொடரில்..

உலகக்கோப்பை தொடரில்..

2019 உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்து துவக்க வீரராக புதிய சாதனையையும் செய்தார். அது மட்டுமின்றி சதம் அடித்த பின் எடுக்கும் ரன்களில் அதிக சராசரியும் வைத்துள்ளார். அதாவது சதம் அடித்த பின்னும் அதிக ரன் குவித்து வரும் வீரராக இருக்கிறார் ரோஹித் சர்மா.

சச்சினை விட அதிக சராசரி

சச்சினை விட அதிக சராசரி

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சைமன் டவுல், ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் சிறந்த துவக்க வீரர் என்றும், சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த வீரர் எனவும் கூறி பாராட்டினார். மேலும், சச்சினை விட அதிக சராசரி வைத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

90 ரன்களில் சிக்க மாட்டார்

90 ரன்களில் சிக்க மாட்டார்

"ரோஹித் சர்மா ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்கும் வேகம் 60, 70, 80 ரன்களை கடந்த பின்னும் சிறப்பாக உள்ளது. ரோஹித் சர்மா 90 ரன்களில் அதிகமாக சிக்கியதையும், அதை கடக்க சிரமப்பட்டதையும் நாம் அதிகம் பார்த்ததில்லை. அவர் தனித்துவமான வீரர்" என்று பாராட்டினார் சைமன் டவுல்.

சச்சின் சிக்கல்

சச்சின் சிக்கல்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், சச்சின் டெண்டுல்கர் பல முறை 90 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். 90 ரன்களை எட்டிய உடன் சதத்தை எட்ட அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்வார். அந்த பலவீனம் ரோஹித் சர்மாவிடம் இல்லை என கூறி உள்ளார் சைமன் டவுல்.

மன்னிக்கவும்

மன்னிக்கவும்

"நான் இந்தியாவில் விமர்சனத்தை சந்தித்தேன். ஏனெனில், நான் ரோஹித் சர்மா தான் எப்போதும் சிறந்த அணியின் துவக்க வீரராக இருக்க வேண்டும் எனக் கூறினேன். என்னை மன்னிக்கவும். ஆனால், புள்ளிவிவரங்களை பாருங்கள். செயல்பாடுகளை பாருங்கள்." என்றார் டவுல்.

சராசரி ஒப்பீடு

சராசரி ஒப்பீடு

"ரோஹித் சர்மாவின் ஒருநாள் சராசரி 49. அவரின் ஸ்ட்ரைக் ரேட் 88. சச்சினின் சராசரி 44. அவரின் ஸ்ட்ரைக் ரேட் 86. இது அவரின் மொத்த கேரியரிலும் என நினைக்கிறேன்." என இருவரின் சராசரியை வைத்து சிறந்த பேட்ஸ்மேனை அடையாளம் காட்டினார் சைமன் டவுல்.

ரோஹித் தான் பெஸ்ட்

ரோஹித் தான் பெஸ்ட்

"இந்த எண்களின்படி, ரோஹித் சர்மாவின் எண்கள் தனித்துவமாக உள்ளது. சச்சினை விட அது நன்றாக உள்ளது. அதனால் தான் ரோஹித் சர்மா என்னைப் பொறுத்தவரை பட்டியலில் முதல் இடம் பிடிக்கிறார். அதன் பின் அந்தப் பட்டியலில் விராட் கோலி, தோனி பேட்டிங் ஆர்டரில் அடுத்து வருவார்கள்" எனக் கூறினார் சைமன் டவுல்.

Story first published: Friday, May 8, 2020, 11:03 [IST]
Other articles published on May 8, 2020
English summary
Simon Doull pointed out that Rohit Sharma is better than Sachin Tendulkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X