For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓபனிங்ல இவரை ஆட வைப்பேன்.. இதை மட்டும் சேவாக் கேட்டா அவ்வளவு தான்.. கங்குலி தந்த சர்ப்ரைஸ்!

மும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடிய மூன்று வீரர்களை, 2003 உலகக்கோப்பை அணியில் சேர்க்க விரும்பினால், யாரை தேர்வு செய்வீர்கள் என ஒரு ரசிகர் கங்குலியிடம் கேள்வி கேட்டுள்ளார்.

Recommended Video

Ganguly picks 3 players from 2019 WC squad for 2003 WC

அதற்கு கங்குலி மூன்று வீரர்களை குறிப்பிட்டதோடு, அவர்களை ஏன் அந்த இடத்தில் ஆட வைப்பேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

2003 உலகக்கோப்பை

2003 உலகக்கோப்பை

2003 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அந்த தொடரில் அணியை வழிநடத்திய கேப்டன் கங்குலி அணித் தேர்வில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். அந்த உலகக்கோப்பையில் ஆடிய பல வீரர்கள் இந்திய அணியின் ஜாம்பவான்களாக பின்னாட்களில் மாறினர்.

சமபல அணிகள்

சமபல அணிகள்

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை விராட் கோலி வழி நடத்தினார். அவரும் அணித் தேர்வில் கவனம் செலுத்தினார். 2003 மற்றும் 2019 உலகக்கோப்பை தொடரில் ஆடிய இந்திய அணிகள் சம பலத்தில் இருந்தன.

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால்

இந்திய வீரர் மயங்க் அகர்வால் பிசிசிஐ டிவியில் இந்திய வீரர்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலியை அவர் பேட்டி எடுத்தார். அப்போது பல்வேறு அனுபவங்கள் குறித்து பேசினார் கங்குலி. இடையே ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

கேள்வி

கேள்வி

அப்போது ஒரு ரசிகர் 2019 உலகக்கோப்பை அணியில் இருந்து எந்த மூன்று வீரர்களை 2003 உலகக்கோப்பை அணியில் ஆட வைக்க விரும்புவீர்கள், அதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விக்கு கங்குலி பதில் அளித்தார்.

தரமான வேகப் பந்துவீச்சாளர்

தரமான வேகப் பந்துவீச்சாளர்

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ராவை தன் அணியில் சேர்க்க விரும்புவேன் எனக் கூறினார் கங்குலி. பும்ரா தரமான வேகப் பந்துவீச்சாளர் என்பதால் 2003 உலகக்கோப்பை நடந்த தென்னாப்பிரிக்காவில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்பதால் தேர்வு செய்ததாக கூறினார்.

துவக்க வீரராக ரோஹித்

துவக்க வீரராக ரோஹித்

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அதில் ரோஹித் சர்மாவை துவக்க வீரராக இறக்கி விட்டு, தான் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்வேன் என்றும் கூறினார் கங்குலி. 2003 உலகக்கோப்பை தொடரில் சேவாக் தான் இந்திய அணிக்கு துவக்கம் அளித்து வந்தார்.

போன் வரும்

போன் வரும்

அதை குறிப்பிட்ட கங்குலி, நான் பேசுவதை சேவாக் கேட்டுக் கொண்டு இருக்கிறாரா எனத் தெரியவில்லை. இதைக் கேட்டால் எனக்கு நாளை போன் வரும். "நீங்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?" என அவர் கேட்பார் ஆனால், இந்த மூன்று வீரர்களை தன் அணியில் ஆட வைப்பேன் என்றார்.

தோனி

தோனி

மேலும், இன்னொரு வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் தான் தோனியை தேர்வு செய்வேன் என்றார். மூன்று வீரர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்றதால் தான் டிராவிட்டை விக்கெட் கீப்பராக வைத்து சமாளித்துக் கொள்வேன் எனவும் கூறினார்.

Story first published: Monday, July 6, 2020, 23:50 [IST]
Other articles published on Jul 6, 2020
English summary
Sourav Ganguly picks 3 players from 2019 World Cup squad for 2003 World cup. He picks Virat Kohli, Rohit Sharma and Jasprit Bumrah.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+