Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையை வென்ற டெக்கான்-கொல்கத்தாவை சுருட்டிய மும்பை

போர் எலிசபெத்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் முதல் போட்டியில் டோணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கில்கிறிஸ்டின் டெக்கான் சார்ஜர்சை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரராக வந்த பார்த்திவ் பொறுப்பில்லாமல் விளையாடி டக் அவுட்டானார். அடுத்து வந்த ரெய்னா, ஹைடனுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய ரெய்னா 2 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

டோணி 22 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் சூப்பராக விளையாடிய 35 பந்தில் 49 ரன்களுக்கு அவுட்டாகி, அரைசதம் கடக்கும் வாய்ப்பை 1 ரன்னில் நழுவவிட்டார். பத்ரிநாத் 8 ரன்களுக்கு அவுட்டானார்.

டெக்கான் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஓரம் 29 பந்தில் 41 ரன்கள் எடுத்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

கில்கிறிஸ்ட் அதிரடி...

அடுத்து பேட் செய்த டெக்கான் அணிக்கு கில்கிறிஸ்ட், கிப்ஸ் சூப்பர் துவக்கம் தந்தனர். சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த கில்கிறிஸ்ட் 19 பந்தில் 44 ரன்கள் எடுத்து, ரெய்னா பந்துவீச்சில் அவுட்டானார். ரோகித் 18, டேவோன் ஸ்மித் 12 ரன்கள் எடுத்தனர்.

கிப்ஸ் ஆட்டமிழக்காமல் 56 பந்தில் 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றார். டெக்கான் சார்ஜர்ஸ் அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வென்றது.

சச்சின் விளாசல்-மும்பை அசத்தல்...

மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய் மும்பை அணிக்கு சச்சின், ஜெயசூர்யா ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. ஜெயசூர்யா 4 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 32 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்.

டுவென்டி-20 போட்டிகளிலும் தன்னால் தொடர்ந்து மிரட்ட முடியும் என்பதை நிரூபித்த சச்சின் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசினார். அவர் 45 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன், டுமினி தலா 18 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து மும்பை அணி 20 ஓவரி்ல் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு ஹாட்ஜ் 24, கங்குலி 34 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து, 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:25 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+